பெண் சகவாசம், குடி.. கமல் போல் வர வேண்டிய சுரேஷ் காணாமல்போன சோகம்

தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை கொடுத்து விட்டு பின்னாளில் அதை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் காணாமல் போன சோகங்கள் நிறைய உண்டு.

அந்த வரிசையில் பிரசாந்த், அரவிந்த்சாமி, கமல் போன்ற காதல் மன்னர்கள் வரிசையில் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்தான் சுரேஷ். பிரபல தயாரிப்பாளர் மகனான இவர், 1981 ஆம் ஆண்டு பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் நடித்து முடித்தார் சுரேஷ். அதன்பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்த சுரேஷுக்கு தமிழ் சினிமாவில் சுத்தமாக மார்க்கெட் குறைந்து தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகராக மாறினார்.

விஜய்யின் தலைவா படத்தில் கூட ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுரேஷுக்கு பெண்கள் சகவாசம் அதிகமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

24 மணி நேரமும் போதையில் இருக்கும் சுரேஷ் பெண்கள் சகவாசமும் அதிகமாக இருந்ததால் சினிமாவின் மீது கவனம் இல்லாமல் தடுமாறி விட்டதாக குறிப்பிட்டுள்ளார். பெரிய அளவு நடிகராக வலம் வர வேண்டிய சுரேஷ் தற்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட இதுதான் காரணமாம்.

சினிமா உலகில் மது போதையிலும் பெண் போதையால் அழிந்த பலர் இருக்கின்றனர். அதில் மிக முக்கியமானவர் சுரேஷ் என்று அழுத்தமாகக் கூறுகிறார் பயில்வான். பயில்வான் சமீபகாலமாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

suresh-actor-cinemapettai
suresh-actor-cinemapettai
- Advertisement -