6 சூப்பர் ஹிட் படங்களை அசால்டாக மிஸ் பண்ணிய ஸ்ரீகாந்த்.. மொத்தமாய் ஸீரோ ஆனதன் பின்னணி

Srikanth: யானை தான் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்ளும் என்று சொல்லுவாங்க. அது ஒரு சில நடிகர்களுக்கு சரியாக பொருந்தி விடும். அடுத்தடுத்து வெற்றி வரும் பொழுது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எடுக்கும் முடிவுகளால் சினிமாவில் இருந்தே காணாமல் போனவர்கள் பலர்.

இந்த லிஸ்டில் இருப்பவர் தான் ஸ்ரீகாந்த். கே பாலச்சந்தர் மூலம் சீரியலில் அறிமுகமான ஸ்ரீகாந்த், அந்த சீரியல் முடிவதற்குள்ளேயே சினிமாவில் ஹீரோவானார். ரோஜா கூட்டம் என்னும் முதல் படத்தின் மூலமே பெண் ரசிகைகளை அதிகம் கவர்ந்தார்.

அரவிந்த்சாமி, மாதவன், ஷாம் போன்ற நடிகர்களின் வரிசையில் சாக்லேட் பாயாக வளர்ந்து வந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் ஸ்ரீகாந்துக்கு சரியான கதை தேர்வு செய்ய தெரியாததால் தமிழ் சினிமாவில் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சூப்பர் ஹிட் படங்களை எல்லாம் தவற விட்டிருக்கிறார்.

மொத்தமாய் ஸீரோ ஆனதன் பின்னணி

கோலிவுட்டுக்கு வருபவர்களுக்கு மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தீராத ஆசையாக இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு ஒன்றும் ஸ்ரீகாந்த் தவற விட்டிருக்கிறார் என்றால் அவருடைய கெட்ட நேரத்தை தான் சொல்ல வேண்டும்.

மாதவன், சூர்யா, சித்தார்த் ஆகியோர் நடித்த ஆயுத எழுத்து படத்தில் நடிப்பதற்கு தான் ஸ்ரீகாந்துக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அந்த பட வாய்ப்பை அவர் மறுத்திருக்கிறார். மாதவனுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவிலான பரிமாணத்தை கொடுத்த படம் என்றால் அது ரன்.

லிங்குசாமி இயக்கம் பெரிய ஹிட் அடித்த இந்த படத்தில் முதலில் நடிப்பதற்கு ஸ்ரீகாந்த் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஜீவா ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்த படம் தான் டிஷ்யூம். இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க வாய்ப்பு வந்தது நடிகர் ஸ்ரீகாந்துக்கு தான்.

விஜய் ஆண்டனியை ஒரு சிறந்த நடிகனாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய படம் தான் பிச்சைக்காரன். இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக கூட இன்று வரை இருக்கிறது. இந்த படத்திலும் முதலில் விஜய் ஆண்டனி கேரக்டரில் நடித்த ஸ்ரீகாந்த்திடம் தான் பேசப்பட்டு இருக்கிறது. ஜெயம் ரவியை பெண் ரசிகைகளிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் அது எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தான்.

இந்த படத்தின் கதையும் முதலில் ஸ்ரீகாந்த் அவர் மறுத்த பிறகுதான் ரவி அதில் நடித்திருக்கிறார். படம் பெரிய அளவில் வெற்றி அடைய விட்டாலும் ஆர்யாவுக்கு எல்லா கேரக்டரும் செட் ஆகும் என்பதை நிரூபித்த படம் தான் நான் கடவுள்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான முதல் அடிக்கவேண்டியது ஸ்ரீகாந்த் தான். பெரும்பாலும் நடிகர்கள் தாங்கள் தவறவிட்ட படங்கள் பற்றி வெளியில் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் தன்னுடைய பெட்டியில் இந்த படங்களை அவர் தவற விட்டு விட்டதாக ஓபனாக பேசியிருக்கிறார்.

ஸ்ரீகாந்தை சர்ச்சையில் சிக்க வைத்த பெண்கள்

சினேகா (காதல் கிசு கிசு)
ஸ்ரீரெட்டி (பட வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி தவறாக பயன்படுத்தினார்)
வந்தனா (ஸ்ரீகாந்தின் மனைவி திருமணத்திற்கு முன் காதலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தார்)

இதிலிருந்து அவர் இந்த தவறுகளை நினைத்து எந்த அளவுக்கு வருந்துகிறார் என்பது தெரிகிறது. நண்பன் படம் ஸ்ரீகாந்துக்கு இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் நல்ல சாக்லேட் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்,

போஸ்
ஜூட்
வர்ணஜாலம்

போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோ கேரக்டர் பண்ணுகிறேன் என்ற பெயரில் கொஞ்சம் இமேஜை கெடுத்துக் கொண்டார்.

ஸ்ரீகாந்த் தொடர்பான மேலும் சில செய்திகள்

Stay Connected

1,170,287FansLike
132,026FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -