ஸ்ரீகாந்த் தவறவிட்ட 6 படங்கள்.. மணிரத்தினத்திற்கு நோ சொல்லி செய்த மகா தவறு

நல்ல வாய்ப்பு ஒரு முறை தான் தேடி வரும் அதை தவற விட்டு விட்டால் வாழ்க்கை பூரா வருத்தப்பட வேண்டியது தான். இது சினிமா பிரபலங்களுக்கு ரொம்பவே பொருந்தும். அப்படித்தான் நடிகர் ஸ்ரீகாந்த் தன்னை தேடி வந்த பல நல்ல வாய்ப்புகளை தவற விட்டுவிட்டு இப்போது புலம்பி கொண்டிருக்கிறார்.

பார்த்திபன் கனவு, பூ என தரமான படைப்புகளில் நடித்து வந்த இவர் கடந்த 13 வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் தவறவிட்ட படங்கள் பற்றி மிகவும் வருத்தத்தோடு கூறி இருக்கிறார்.

அதில் மணிரத்தினத்தின் வாய்ப்பை இவர் தவறவிட்டது தான் ஆச்சரியமாக இருக்கிறது. மாதவன், சூர்யா, சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ஆயுத எழுத்து படத்தில் இவரை நடிக்க வைக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீகாந்த் அதை மறுத்திருக்கிறார். அதேபோல் 12b படத்திலும் இவர் தான் நடிக்க வேண்டியது.

Also read: 2024 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள்.. போட்டி போடும் டாப் ஹீரோக்கள்

அதையும் ஸ்ரீகாந்த் கைநழுவ விட்டுவிட்டார். அதை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட்டான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தையும் மிஸ் செய்திருக்கிறார். மேலும் விஜய் ஆண்டனி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்திற்கும் முதலில் இவரை தான் அணுகி இருக்கிறார்கள்.

ஆனால் அந்த வாய்ப்பையும் ஸ்ரீகாந்த் தவற விட்டுவிட்டார். அதேபோல் லிங்குசாமி இயக்கத்தில் மாதவனுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த ரன், பாலாவின் நான் கடவுள் ஆகிய படங்களையும் இவர் மறுத்திருக்கிறார். ஒருவேளை இந்த படங்களில் எல்லாம் அவர் நடித்திருந்தால் நிச்சயம் தற்போது இவர் தான் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தில் இருந்திருப்பார்.

ஆனால் அவருடைய போதாத காலம் இந்த படங்களை எல்லாம் தவற விட்டு இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் பல நடிகர்கள் இப்படித்தான் தேடி வந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டு போச்சே போச்சே என புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

Also read: நிஜ புருஷன், பொண்டாட்டிய சேர்ந்து நடித்த 3 படங்கள்.. ஜோடி பிரிச்சு சகுனி வேலை பார்த்த மணிரத்தினம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்