பசி மயக்கத்தில் விழுந்து கிடந்த சூரி.. . அதே இடத்தில் விஸ்வரூபம் எடுத்த விடுதலை குமரேசன்

நடிகர் சூரி ஹீரோவாக நடித்து, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் தற்போது ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. முழுக்க முழுக்க பாஸிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் சூரிக்கு தமிழ் சினிமாவில் மற்றும் ஒரு பரிமாணத்தை கொடுத்திருக்கிறது.

ஒரு காமெடி நடிகராக இருந்த சூரி, அவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இன்று ஹீரோவாக வெற்றி அடைந்திருக்கிறார். சூரிக்கு அவ்வளவு எளிதாக எல்லா வாய்ப்புகளும் கிடைத்துவிடவில்லை. அதற்காக அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் அதிகம். அதையெல்லாம் தாண்டி இப்போது சாதித்திருக்கிறார்.

Also Read:விடுதலை டீமுக்கு அடித்த லக்.. மகிழ்விக்க தயாரிப்பாளர் வாரி வழங்கிய பரிசு!

பல வருடங்களாக சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்று போராடிய சூரி நிறைய படங்களில் ஒரு சின்ன கேரக்டரில் வந்து போவார். அதன் பின்னர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்த பிறகுதான் இவருக்கு சினிமாவில் ஒரு அடையாளம் கிடைத்தது.

நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விமல் படங்களில் காமெடியனாக நடித்துக் கொண்டிருந்த சூரி படிப்படியாக பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடியனாக நடித்தார். இன்று விடுதலை திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கும் இவர் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.

Also Read:முக்கியமான இந்த 7 காரணங்கள்.. மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய வெற்றிமாறனின் விடுதலை

சூரி ஒரு முறை சினிமா ஆடிசனுக்காக சென்றிருந்தபோது, அங்கேயே மயங்கி விழுந்து விட்டாராம். என்னவென்று விசாரித்த பொழுது இரண்டு மூன்று நாட்களாக சாப்பிடாமல் இருந்த சூரி பசி மயக்கத்தில் கீழே விழுந்திருக்கிறார். அப்போது அவருக்கு டீ மற்றும் பிஸ்கட் வாங்கி கொடுத்த அனுப்பி இருக்கிறார்கள். அதன் பின்னர் ஓரளவுக்கு வளர்ந்து வரும் மாறி இருக்கிறார் சூரி.

அப்போது ஆடிசன் நடந்த அதே ஆபீஸ் விற்பனைக்கு வந்திருக்கிறது. மார்க்கெட் விலையை விட அதிகமாக விலை இருந்த காரணத்தால் அவருடைய மனைவி அதை வாங்க வேண்டாம் என்று சொன்னாராம். ஆனால் பழசை மறக்காத சூரி இந்த ஆபீசை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் நான் வாங்குவேன் என்று சொல்லி இன்று வாங்கி இருக்கிறார். இது சூரியின் வளர்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.

Also Read:விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

- Advertisement -