ஒரே வருடத்தில் 40 படங்கள் நடித்த பிரபல நடிகர்.. விஜயகாந்த், மோகனை எல்லாம் ஓரம் கட்டியவர்!

இன்று வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதற்கே ஒவ்வொரு நடிகருக்கும் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் 80, 90 களில் வருடத்திற்கு பல படங்களில் நடித்த நடிகர்களும் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு வருடத்தில் அதிக படங்கள் நடித்தவராக வலம் வருபவர் மோகன். இவர் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 19 படங்கள் நடித்து ரிலீஸ் செய்துள்ளாராம்.

அதனைத் தொடர்ந்து புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடிப்பில் ஒரே ஒரு இடத்தில் 18 படங்கள் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்தது. அதன்பிறகு அப்படி ஒரு சாதனையை யாரும் செய்யவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஆனால் அப்பனுக்கு அப்பன் எப்போதும் இருப்பான் என்பதை போல நான் இருக்கேன் என அந்த லிஸ்டில் வந்து சேர்ந்தவர்தான் நடிகர் ஷாநவாஸ் நசீர். பிரபல மலையாள நடிகரான இவர் ஒரு வருடத்தில் 40 படங்களில் நடித்துள்ளாராம்.

இந்திய சினிமாவில் ஒரு வருடத்தில் அதிக படங்களில் நடித்தவரும் இவர்தான் என்ற பெருமையுடன் வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுக்காத நடிகரும் இவர் ஒருவர்தான் என கூறுகின்றனர்.

இன்று ஒரு படத்தில் நடித்து விட்டால் அந்த நடிகர் நடிகைகள் காட்டும் பந்தாவுக்கு அளவில்லை. ஆனால் அந்த காலகட்டங்களில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்த போதும் இவர் பெரிதாக பந்தா காட்டியதில்லை என்று கூறுகிறார்கள் அவரது வட்டாரங்கள்.

shanavas naseer-cinemapettai
shanavas naseer-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்