திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

மீண்டும் மகனுடன் புது அவதாரம் எடுக்கும் செந்தில்.. இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் எத்தனையோ காமெடி நட்சத்திரங்கள் கலக்கி கொண்டிருந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் செந்தில். இவர் நடிப்பில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் காமெடியில் கலக்கலாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் நகைச்சுவை மன்னன் கவுண்டமணியுடன் இணைந்து இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். அப்படி அவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகு காலப்போக்கில் புது புது காமெடி நடிகர்களின் வரவால் செந்தில் அதிக அளவில் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

அந்த வகையில் இவர் எப்போதாவது சில திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவர் 2019ஆம் ஆண்டு ஒரு வெப் தொடரில் நடித்து இருந்தார். தற்போது சில வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் அவருடைய மகன் மணி பிரபுவும் நடிக்க இருக்கிறார்.

அந்த வரிசையில் நடிகர் பாபி சிம்ஹா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தடை உடை என்ற திரைப்படத்தில் தான் செந்திலும் அவருடைய மகனும் இணைந்து நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் அவர்கள் இருவரும் அப்பா மகனாகவே நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்போது வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் பாபி சிம்ஹா இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

senthil-actor
senthil-actor

மேலும் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. செந்தில், அவருடைய மகன் மற்றும் பாபி சிம்ஹா அனைவரும் சந்தோஷமாக சிரித்து பேசுவது போன்று இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

senthil-bobbysimha
senthil-bobbysimha
- Advertisement -

Trending News