லேடிஸ் விஷயத்தில் கொஞ்சம் அல்ல ரொம்பவே வீக்காக இருக்கும் வில்லன் நடிகர் ஒருவர் செய்யும் அட்ராசிட்டி தான் காத்து வாக்கில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவருக்கு திரையுலகில் ரொம்ப நல்ல பெயர். இதில் அவருடைய வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறி இருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை எல்லாம் வளைத்து போட்டு காரியத்தை சாதித்துக் கொள்ளும் இவர் சமீபத்தில் இளம் நடிகை ஒருவரையும் தன் வலையில் விழ வைத்து விட்டாராம். என்னுடைய அடுத்த படத்தில் நீ தான் ஹீரோயின் என்று சிரிச்சு சிரிச்சு பேசியே ஹோட்டல் ரூம் வரை அழைத்து சென்று விட்டாராம்.
நடிகையும் வாய்ப்பு வேண்டும் என்பதற்காக நான்கு நாட்கள் அந்த வில்லனுடன் தங்கி இருக்கிறார். ஆனால் இதில் தான் அவர் தன் சாமர்த்தியத்தை காட்டியுள்ளார். ஏனென்றால் சில நடிகர்கள் காரியம் முடிந்ததும் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் கழட்டி விட்டு விடுவார்கள்.
இதனால் முன்னெச்சரிக்கையாக பிளான் போட்டு வைத்த நடிகை வாய்ப்பு கிடைக்கும்போது கிடைக்கட்டும் நான்கு நாள் தங்குவதற்கு 20 லட்சம் ரூபாயை கொடுங்கள் என்று பில்லை நீட்டிவிட்டாராம். ஒரு நாளைக்கு 5 லட்சம் கணக்கில் இவ்வளவு பெரிய தொகையை கில்லாடியாக வாங்கி இருக்கிறார் நடிகை.
ஆனால் யாருகிட்ட வேலைய காட்டுற என்ற ரீதியில் அந்த நடிகர் மொத்த காசையும் தயாரிப்பாளர் தலையில் கட்டி விட்டாராம். அதாவது அடுத்த படத்திற்கு இவரை ஹீரோயினாக புக் செய்து விடுங்கள் என்று கூறி சம்பளத்தோடு சேர்த்து 20 லட்சம் எக்ஸ்ட்ராவாக கொடுங்கள் என அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.
இதனால் ஆடி போன முதலாளி வேறு வழியில்லாமல் அந்த காசை கொடுத்தாராம். ஏனென்றால் இப்போது இந்த நடிகர் தான் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறார். அதனால் தான் இதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது என அந்த தயாரிப்பாளர் நொந்து போய் புலம்பி வருகிறாராம். இப்படி பொம்பள சோக்கில் தயாரிப்பாளரிடம் ஆட்டைய போட்ட நடிகரின் புராணம் தான் தீயாக பரவுகிறது.