மற்றொரு நடிகையின் ஆடையை பற்றி கொச்சையாக பேசிய சதீஷ்.. சைமா விருது விழாவில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்

நாடக கலைஞர் மற்றும் வசன கர்த்தா கிரேசி மோகனிடம் உதவியாளராக இருந்தவர் தான் நடிகர் சதீஷ். 2010 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ்ப்படம் மற்றும் மதராசபட்டினம் திரைப்படங்களின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். வாகை சூடவா, மெரினா, எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி, ஆம்பள, ரெமோ திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

இப்போது சதீஷ் ஓ மை கோஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சதீஷுடன் சன்னி லியோன், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜிபி முத்து ஆகியோர் இணைந்திருக்கின்றனர். இந்தப்படம் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் சதீஷ் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: உன் பொண்டாட்டி போடுற டிரெஸ்ஸை பாரு.. சன்னி லியோனால் சதீஷை வெளுத்து வாங்கிய இயக்குனர்

இந்த விழாவிற்கு நடிகை சன்னிலியோன் வந்திருந்தார். சன்னி லியோன் கவர்ச்சிக்கு பேர் போனவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அன்று அவர் புடவையில் வந்திருந்தார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா படு கிளாமராக வந்திருந்தார். நடிகர் சதீஷ் இவர்கள் இருவரின் ஆடையையும் கம்பேர் பண்ணி பேசியிருந்தார்.

நடிகர் சதீஷின் அந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சை ஆனது. பாடகி சின்மயி, மூடர்கூடம் இயக்குனர் நவீன் போன்றோர் சதீஷுக்கு எதிராக தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சதீஷ் தர்ஷா குப்தா பேச சொல்லியதால் தான் நான் அவ்வாறு பேசினேன் என்று கூறி ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உடனே அதை நீக்கிவிட்டார்.

Also Read: சதீஷ் சொன்னது எல்லாம் பொய்.. வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தம்

இந்நிலையில் சதீஷ் மற்றொரு நடிகையின் ஆடையை பற்றி தவறாக கமெண்ட் செய்யும் ஒரு வீடியோவை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் நடந்த சைமா விருது வழங்கும் விழாவை நடிகர் சதீஷ் மற்றும் நடிகை தான்யா தொகுத்து வழங்கினார். அப்போது மேடையில் நடிகை தான்யாவை திரும்பி நிற்க சொல்லி அவர் போட்டிருக்கும் ஆடையை பற்றி கொச்சையாக கமெண்ட் செய்திருக்கிறார்.

தர்ஷா குப்தா பிரச்சனை சர்ச்சையாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் சதீஷுக்கு எதிராக இந்த வீடியோவையும் ட்ரெண்ட் செய்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள நடிகர்கள் இருந்த விழாவில் சதீஷ் செய்த கமெண்ட் ரொம்பவே முகம் சுளிக்கும்படி இருந்தது. நடிகை தான்யா ஏழாம் அறிவு, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தவர்.

Also Read: சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டி விடும் ஜிபி முத்து.. கதறி அழும் சிங்கிள்ஸ்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -