600 படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ் மகனின் புது அவதாரம்.. அப்பாவை மிஞ்சும் கம்பீரமான புகைப்படம்

Actor Saranraj: தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் சுமார் 600 படங்களுக்கு மேல் நடித்தவர் தான் நடிகர் சரண்ராஜ். இவர் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஜென்டில்மேன் படத்தில் போலீசாக மிரட்டினார்.

அதன் தொடர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தர்மதுரை, பாட்ஷா, பாண்டியன், வீரா உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரண்ராஜ் நடித்திருந்தார். இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் அவரது மகன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

Also Read: வளர்த்துவிட்ட ஏணியை உதறித் தள்ளிய பிரபலங்கள்.. நம்பி இருந்த குஞ்சுமோனனுக்கு கிடைத்த அவமானம்

குப்பன் என்று டைட்டிலில் உருவாகும் படத்தின் கதை, திரைப்பட வசனம் போன்றவற்றையும் சரண்ராஜ் தான் எழுதி இயக்குகிறார். சோனி ஸ்ரீ ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மேலும் பைலட்டாக இருந்து நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நடிப்புக் கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்ட சரண்ராஜ் இரண்டாவது மகன் தேவ் தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் இவருடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாச்சலம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல இந்த படத்தில் சரண்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் கதாநாயகன் குப்பத்து மீனவ இளைஞராக இருந்து கொண்டு மார்வாடி பெண்ணை காதலிப்பது போல் படத்தின் கதையை உருவாக்கி உள்ளனர்.

 நடிகர் சரண்ராஜ் மகன்

actor-saranraj-son-1-cinemapettai
actor-saranraj-son-1-cinemapettai

Also Read: பெயரை போடாமல் பழி வாங்கிய தயாரிப்பாளர்.. 29 வருடங்கள் ஆகியும் பகையை மறக்காத ஷங்கர்

இந்நிலையில் சரண்ராஜ் மகன் தேவ் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது அப்பாவை மிஞ்சிய கம்பீரமான உடல் கட்டுடன் இருக்கிறார் என பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

அப்பாவை மிஞ்சும் கம்பீரமான சரண்ராஜ் மகனின் புகைப்படம்

actor-saranraj-son-2-cinemapettai
actor-saranraj-son-2-cinemapettai
- Advertisement -