வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அப்பா 10 அடி பாய்ந்தால் மகள் 16 அடி.. பிஞ்சு வயதிலேயே கோமாளிக்கு புகழை தேடி தந்த மகள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவரும் பிரபல நடிகருமான புகழின் மகள் பிறந்து 11 மாதங்களில் உலகச் சாதனை படைத்துள்ளார். இது பலராகும் பாராட்டப்பட்டு வருகிறது.

குக் வித் கோமாளி

விஜய் டிவி என்றாலே புதுமைக்கும் திறமையாளர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்தும் கலைஞர்களை வளர்த்தெடுக்கும் இடம் என்று ரசிகர்களால் பேசப்படுகிறது. அந்தளவு சினிமாவில் இன்று பிரபலமாக உள்ள பல நட்சத்திரங்கள் அங்கிருந்து அடையாளப்படுத்தப்பட்டு, மக்களால் அங்கீகரிக்கப்பட்டு இன்று முன்னணி நடிகர்களாகவும், கலைஞர்களாலும் ஜொலித்து வருகின்றனர்.

அப்படி, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் முதல் சீசன் 2019 ஆம் ஆண்டும், இரண்டாவது சீசன் 2020 ஆம் ஆண்டும், 3வது சீசன் 2022 ஆம் ஆண்டும், இதன் நாலாவது சீசன் 2023 ஜூலையில் நடத்தப்பட்டது. இதன் 5வது சீசன் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் ஃபேவரெட்டாக மாறியவர் புகழ்.

இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த குறும்பும், அட்டகாசமும் ரசிகர்களால் மறக்க முடியாமல் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிதுள்ளார். எனவே குக் வித் கோமாளியின் அடுத்தடுத்த சீசன்களில் கட்டாயம் புகழும் இடம்பிடித்திருந்தார். சின்னத்திரையைத் தாண்டி அவரது திறமைக்கு பெரிய திரையிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின், மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் புகழ் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் கடந்த மே மாதம் வெளியானது.

இதைத்தொடர்ந்து புகழ், கைதி, வலிமை, எதற்கும் துணிந்தவன், அயோத்தி, ஆகஸ்ட் 16 1947 ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தினார். ஜூ கீப்பர் படத்தைத் தொடர்ந்து துடிக்கிறது மீசை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் புகழின் கைக் குழந்தை புதிய உலக சாதனை படைத்திருக்கிறது.

புகழின் மகள் ரிதன்யா உலக சாதனை

புகழ், பென்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தம்பதிக்கு 11 மாதங்களே ஆக ரிதன்யா என்ற மகள் இருக்கிறார். இவர் அதிக நேரம் டம்பில்ஸை தூக்கி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 2 கிலோ எடை கொண்ட டம்பிள்ஸாஇ 17 வினாடிகள் பிடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் ரிதன்யா. இத்தகவலை கின்னஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 12 ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா புகழேந்தி என்பவர், 2 கிலோ எடைகொண்ட டம்பில்ஸை அதிக நேரம் கையில் வைத்திருந்த குழந்தை என்ற புதிய சாதனை படைத்திருப்பதாக சான்றிதழையும் வழங்கி கவுரவித்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பா 10 அடி பாய்ந்தால் மகள் 16 அடி பாய்வாரோ என ரசிகர்கள் கூறி, இனி வரும் காலத்திலும் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என புகழின் குடும்பத்திற்கு பாராட்டும் வாழ்த்துகளும் கூறி வருகின்றனர்.

ridhayna
ridhayna
- Advertisement -

Trending News