6 வருடங்களுக்குப் பிறகு அசத்தலாக தமிழில் களமிறங்கியுள்ள பிரகாஷ்ராஜ்.. அதுவும் மாஸ் கூட்டணியுடன்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் பிரகாஷ்ராஜ். இவர் நேர்மறை, எதிர்மறை, குணச்சித்திர வேடங்கள் என நடித்து தனது பன்முகத் திறமையை வெளிக்காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

அதைப்போல் பிரகாஷ்ராஜ் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பணியாற்றியுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ் கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு ‘தூங்காவனம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து தமிழில் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் பிரகாஷ் தற்போது தமிழில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது தற்போது மாபியா படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண் விஜய்யும், பிரியா பவானி சங்கர் நடிக்கவிருக்கின்றனராம். இந்த படத்தில் நடிப்பதற்காக பிரகாஷ்ராஜும், யோகிபாபுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

actor-prakashraj-cinemapettai

மேலும் படக்குழு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஒரே கட்டமாக நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாஸ் கூட்டணியுடன் களம் இறங்கவிருக்கும் பிரகாஷ்ராஜின் நடிப்பை திரையில் காண பலர் ஆவலோடு காத்திருக்கின்றனராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்