பிரகாஷ் ராஜ் அப்பாவாக நடித்து சக்ஸஸ் ஆன 5 படங்கள்.. மறக்க முடியாத பவர்புல் கேரக்டர்ஸ்

பிரகாஷ் ராஜ் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்னும் பன்முகத் திறமை கொண்டவர். 90 களின் ஆரம்பத்தில் வில்லனாக மிரட்டிய பிரகாஷ் ராஜ், இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிப்பில் மிளிர்கிறார். 2007 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் படத்துக்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பிரகாஷ் ராஜ் அப்பாவாக நடித்து சக்ஸஸ் ஆன 5 படங்கள்,

எம்.குமரன் S/O மகாலட்சுமி: “அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி” என்னும் தெலுங்கு படத்தின் தழுவலாக வந்த படம் தான் எம்.குமரன் S/O மகாலட்சுமி. தன்னுடைய குறிக்கோளுக்காக கர்ப்பமாக இருக்கும் காதலியை தனியே விட்டு, மலேசியா செல்லும் பிரகாஷ் ராஜ் மிகப்பெரிய குத்துசண்டை வீரர் ஆகி அங்கேயே தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்து கொள்கிறார். காதலியின் மகனான ஜெயம் ரவி சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரகாஷ் ராஜிடம் வரும் போது முதலில் அவரை வெறுக்கும் பிரகாஷ் ராஜ், பின்பு ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரத்தில் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read: அக்கட தேசம் வாரி வழங்கிய 5 பொக்கிஷமான நடிகர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தில் சூப்பர் ஸ்டார்

அறிந்தும் அறியாமலும்: விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் அறிந்தும் அறியாமலும். தன்னுடனே இருக்கும் மகன் ஆர்யா மற்றும் தன்னை பிரிந்தும், புரிந்து கொள்ளாமலும் இருக்கும் மகன் நவதீப் என இருவர் மீதும் அன்பை பொழியும் அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார்.

அபியும் நானும்: 2008 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ் நடித்து தயாரித்த படம் அபியும் நானும். மகளின் மீது பேரன்பு கொண்ட தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். தன்னுடைய சிறந்த நடிப்பினால் ஒவ்வொரு பெண்களுக்கும் தன் தந்தையை நினைவுப்படுத்தியிருப்பார்.

Also Read: தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

சந்தோஷ் சுப்பிரமணியம்: பொம்மரில்லு என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் சந்தோஷ் சுப்பிரமணியம். அப்பா – மகனின் உறவை சுற்றி பின்னப்பட்ட கதை இது. இந்த படத்தில் அப்பாவாக பிரகாஷ் ராஜும், மகனாக ஜெயம் ரவியும் நடித்திருந்தார்கள். பிள்ளைகளை தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள நினைக்கும் அப்பாக்களுக்கு பாடமாக இந்த படம் இருந்தது.

தோனி: 2012 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் எழுதி, இயக்கி, தயாரித்த படம் தோனி. கிரிக்கெட் விளையாட்டு வீரர் மகேந்திர சிங் தோனிபோல் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் மகனுக்கும், தன்னுடைய மகன் MBA பட்டதாரி ஆக வேண்டும் என்று ஆசைப்படும் தந்தைக்கும் இடையேயான உறவுச்சிக்கல் தான் இந்த படத்தின் கதை. மனைவி இல்லமால் பிள்ளைகளை வளர்க்கும் தந்தையாக பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருப்பார்.

Also Read: தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த 8 வேறு மாநில நடிகர்கள்.. உயர பறந்த எம்ஜிஆரின் கொடி

- Advertisement -