ரப்பர் மனிதனுக்கு ஹாப்பி பர்த்டே.. தலை சுற்ற வைக்கும் பிரபுதேவாவின் சொத்து விவரம்

Prabhudeva Networth: இந்த மனுஷனுக்கு உடம்புல எலும்பு இருக்கா இல்லையா. இப்படி ரப்பர் மாதிரி வளைகிறாரே என பிரபுதேவாவை பார்த்து கூறுவது உண்டு.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடன புயல் என பல பெயர்கள் இவருக்கு உள்ளது. அதேபோல் டான்ஸர், டான்ஸ் மாஸ்டர், ஹீரோ, இயக்குனர் என பல அவதாரங்களும் இருக்கிறது.

அப்படிப்பட்ட பெருமைக்குரிய பிரபுதேவா இன்று தன்னுடைய 51 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அனைவரும் வாழ்த்துக் கூறி வரும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றிய விவரத்தை காணலாம்.

பிரபு தேவாவின் சொத்து மதிப்பு

நடிப்பு, கோரியோகிராபி மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோ, மேடை நிகழ்வுகள் என இவர் பிஸியாக தான் இருக்கிறார். இதன் மூலமும் அவருக்கு நல்ல வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

அதன்படி இவருக்கு சென்னை, மும்பை பகுதிகளில் ஆடம்பர பங்களாக்கள் இருக்கின்றன. அதேபோல் அசையும் அசையா சொத்துக்களும் இருக்கிறது.

மேலும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ், டொயோட்டா ஃபார்ட்யூனர் என ரக ரகமான கார்களும் இருக்கிறது. இதன் மதிப்பே கிட்டத்தட்ட 5 கோடியை தாண்டும்.

அந்த வகையில் இந்த நடன புயலின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 150 கோடியை தாண்டும். தற்போது கோட் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பிரபுதேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்