நடிப்பு, மிமிக்ரி என அசத்தும் மணிகண்டன் அதுலயும் கில்லியா?. குறட்டை மோகன் செய்த 5 சம்பவம்

Actor Manikandan: பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கக்கூடிய நடிகர் மணிகண்டன் இப்போது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் காதலர் தினத்தை முன்னிட்டு அவருடைய லவ்வர் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு அவர் நடித்த குட் நைட் என்ற படம், அவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது. ஆனால் இவர் ஹீரோவாக நடிப்பதற்கு முன்பே மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆகவும், பண்பலை வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பின்னணி பேசி இருக்கிறார். இப்படி பன்முகத் திறமை கொண்ட மணிகண்டன் 5 தரமான படங்களுக்கு உரையாடலும் எழுதி இருக்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

பீட்சா 2- தி வில்லா: புதுமுக இயக்குனர் தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் வெளியான இந்த திரில்லர் படத்தின் மூலம் தான் எழுத்தாளராக நம்முடைய குறட்டை மோகன் மணிகண்டன் அறிமுகமானார். இந்தப் படத்தில் தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை என தவிக்கும் ஹீரோ, ஒரு வளரும் எழுத்தாளராக வாழ்க்கையில் முன்னேற முட்டி மோதுகிறார்.

இவரைப் பற்றி அவருடைய காதலியும் நண்பர்களும் மட்டுமே புரிந்து கொள்கின்றனர். ஹீரோவின் தந்தை சாகும்போது ஒரு பெரிய பங்களாவை மட்டுமே விட்டுட்டு போகிறார். அந்த பங்களாவில் இருக்கும் சில ஓவியங்கள் ஒவ்வொன்றாக அரங்கேற, பயந்து போய் வீட்டை விற்க பார்க்கிறார். அப்போது பல எதிர்பாராத நிகழ்வுகளும் நடக்கிறது. இந்த படத்திற்கு மணிகண்டன் ஒரு டயலாக் ரைட்டர் ஆக தன்னுடைய முழு திறமையும் வெளிக்காட்டினார்.

தம்பி: மலையாளம் முன்னணி இயக்குனரான ஜீது ஜோசப் இயக்கத்தில் கார்த்திக், ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தம்பி படத்திற்கும் மணிகண்டன் தான் டயலாக் எழுதினார். 15 வருடத்திற்கு முன்பு காணாமல் போன மகனாக கார்த்தி, ஒரு குடும்பத்தில் போலி மகனாக நடிக்க வருகிறார்.

ஒரு மகனாக தம்பியாக நடிக்கும் நாடகத்தில், எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் அவரை அந்த குடும்பம் வாரிசாக ஏற்றுக் கொண்டதா? காணாமல் போன உண்மையான தம்பி திரும்பி வந்தானா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை. படத்தில் ‘சுயநலம்’ திரைக்கதையின் முக்கிய அம்சமாக இருந்தது. சில உணர்வுபூர்வமான காட்சிகளில் மணிகண்டனின் டயலாக் ஹைலைட் ஆக பார்க்கப்பட்டது.

Also Read: லைக்கா தலையில் துண்டை போட்ட லால் சலாம்.. ஸ்கோர் செய்த லவ்வர், 4ம் நாள் வசூல் நிலவரம்

நடிகர் மணிகண்டன் டயலாக் எழுதிய ஐந்து படங்கள்

விஸ்வாசம்: அல்டிமேட் ஆக்சன் ஹீரோவான அஜித் செண்டிமெண்டாக நடித்த படம் தான் விஸ்வாசம். இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார். கோபம், அடிதடியால் தன்னுடைய மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழும் அஜித், கடைசியில் அவர்களுடன் சேரும் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைக்கும்.

அதிலும் ஓட்டப்பந்தயத்தில் மகளை ஜெயிக்க வைப்பதற்காக அஜித் வாங்கும் அடி, அதன் பின் ஜெயித்த மகளை அரவணைக்கும் போது அப்பா என அவர் அழைக்கும் போது ‘என் சாமி’ என அஜித் சொல்லும் டயலாக் புல்லரிக்க வைக்கும். இந்த படத்திற்கு உரையாடல் எழுதியவர் குறட்டை மோகன் மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா: வித்தியாசமான வில்லன்- போலீஸ் கதைதான் விக்ரம் வேதா. இந்த படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அட்டகாசமாக நடித்து மிரட்டினர். இந்த படத்திற்கும் டயலாக் எழுதியவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நடிகர் மணிகண்டன் தான்.

அயலான்: இதுவரை தமிழ் சினிமா கையில் எடுக்காத ஏலியன் கான்செப்டில் சமீபத்தில் வெளியான படம் தான் அயலான் இந்த படத்திற்கு உரையாடல் எழுதியவர் நடிகர் மணிகண்டன் தான். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் குட்டீஸ் முதல் 60ஸ் வரை ரசிக்கக்கூடிய படமாக இருந்தது. இந்த படத்தில் இருந்த ஒவ்வொரு வசனங்களும் இளசுகள் ரசிக்கக்கூடிய ட்ரெண்டிங் டயலாக் ஆகவே இருந்தது.

Also Read: 2024ல் சம்பளத்தை உயர்த்திய 5 புது ஹீரோக்கள்.. ஜெட் வேகத்தில் போகும் ராஜாக்கண்ணு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்