லிவிங்ஸ்டனுக்கு இப்படி ஒரு மகளா.? அரபி குத்து பாடலுக்கு செம குத்து குத்திய வீடியோ!

1982ல் பாக்கியராஜ் நடிப்பில் வெளியான “டார்லிங் டார்லிங் டார்லிங்” என்ற திரைப்படத்தில் நடிகர் லிவிங்ஸ்டன், வெல்லிங்டன் டிரெயின் ஸ்டேஷன் மாஸ்டர் என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்சினிமாவில் அறிமுகமானார்.

சுந்தர புருஷன், சொல்லாமலே உள்ளிட்ட படங்களின் நாயகனாகவும், கேப்டன் பிரபாகரன்,வாய்க்கொழுப்பு, வாலி, ஜாலி உள்ளிட்ட படங்களிலும் குணச்சித்திர வேடங்கள் உட்பட தமிழில் நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் லிவிங்ஸ்டன்க்கு ஜோவிதா, ஜெம்மா என 2 மகள்கள் உள்ளனர், இதில் இவரது முதல் மகளான ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பூவேஉனக்காக தொடரில் கதாநாயகிக்கு தோழியாக நடித்திருந்தார்.

பின்னர் ஜோவிதா மேற்படிப்புக்கு செல்ல இருந்த நிலையில் அத்தொடரிலிருந்து விலகினார். தற்போது ஜோவிதா சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அருவி தொடரில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஜோவிதா கலக்கலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இவர் நடனமாடி பதிவிடும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையை ஜோவிதா அரபி குத்து என்ற பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் பூஜா ஹெக்டே போல் ஆடி உள்ளார் என வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Next Story

- Advertisement -