கமலுக்கு டாட்டா போட்ட மணிரத்தினம்.. கும்பிடு போட்டு அமெரிக்காவிலிருந்து பறந்த ஆண்டவர்

Actor Kamal joined Mani Ratnam’s Thug Life Shooting in Serbia: 38 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்தினத்தின் நாயகனாக வந்த உலக நாயகன் கமல், “நல்லவரா? கெட்டவரா?” என்ற கேள்விக்கனையை ரசிகர்களிடம் தொடுத்து இன்று வரை நாயகனை எவர்கிரீன் மூவியாக இடம்பெற செய்து விட்டார். அதே கூட்டணி இன்று தக்லைஃபில் இணைந்துள்ளது.

உலகென்பது பரமபதம், விழுந்த பின் உயர்வு வரும் என்பது போல் 2022 இல் விக்ரமுக்கு பின் தரமான கம்பேக்க்குடன் வந்த சகலகலா வல்லவன் கமல் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகுவதோடு கதர் ஆடை பிசினஸ் போன்று வணிகத்திலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.

ஆம் அமெரிக்காவில் டான்ஸ் மாஸ்டரின் மனைவி, பிரபல ஆடை வடிவமைப்பாளர் அமிர்தா ராமுடன் சேர்ந்து அமெரிக்காவில் KH ஹவுஸ் என்ற பெயரில் கதர் ஆடை தொழிலில் கொடிக்கட்டி பறந்து வருகிறார். இதனால் அடிக்கடி அமெரிக்கா செல்லும் கமல் தன் கதர் ஆடை தொழிலை விரிவாக்கம் திட்டத்தையும் மேற்கொண்டு வருகிறாராம்.

Also read: ரஜினி விட்டதை பிடித்த கமல்.. அதை பிடிக்க முடியாமல் ஏன்டா விட்டோம் என்று வருத்தப்படும் நடிகர்கள்.!

மணிரத்தினத்தின் கேங்ஸ்டர் படமான செக்க சிவந்த வானம் படத்தில்  இடம்பெறும் சிம்புவின் காட்சிகள் பெரும்பாலும் செர்பியாவில் படமாக்கப்பட்டன. தென் கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவின்  லொகேஷன்னிலும் அழகிலும் ஈர்க்கப்பட்ட மணிரத்தினம் தனது தக்லைஃப் படத்தின் சண்டைக் காட்சிகளை செர்பியாவில் படமாக்க போவதாக திட்டம் போட்டு உள்ளார்.

இதனால் மணிரத்தினமும் அவரது படக் குழுவினரும் செர்பியாவை முற்றுகையிட்டு உள்ளனர். பிப்ரவரி தொடக்கத்தில் சென்னையில் தக்லைஃப் படத்தின் பூஜை போட பட்டு ஷூட்டிங் தொடங்கியது. தக்லைஃபின் சில காட்சிகளை படம்பிடித்ததோடு முக்கியமான சண்டை காட்சிக்காக செர்பியாவுக்கு சென்றுள்ளார் மணிரத்னம்.

இவரைத் தொடர்ந்து கமலும் அமெரிக்காவிலிருந்து செர்பியா சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சண்டை காட்சிகள் செர்பியாவில் படமாக்கப்பட உள்ளதாம். பலத்த எதிர்பார்ப்புக்கு பின் கமலின் தக்லைஃப் இனிதே துவங்கியது.

Also read: விக்ரம் வெற்றியால் 750 கோடி முதலீடு.. அடுத்தடுத்து கமல் தயாரிப்பில் நடிக்கும் 5 ஹீரோக்கள்