இனி படங்களில் நடிக்க மாட்டேன்.. ரசிகர்களை மட்டும் நம்பி சவால் விட்ட நடிகர்.

1980 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வறுமையின் நிறம் சிவப்பு. இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, எஸ் வி சேகர், திலீப், பிரதாப் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் புரட்சிகரமான மற்றும் வேலை கிடைக்காத வறுமையில் வாடும் இளைஞர்களைப் பற்றிய கதையாக அமைந்தது. இதில் கமல்ஹாசன், திலீப், எஸ் வி சேகர் மூவரும் நண்பர்களாக நடித்திருந்தனர்.

இதில் எஸ் வி சேகர் அவர்களின் எதார்த்தமான நடிப்பு மற்றும் காமெடி அனைத்தும் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. பல மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ் வி சேகர் தமிழ் சினிமாவில் நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பிறகு வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்த படத்தில் நடிக்கும் பொழுது எஸ் வி சேகர் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்து சிரிக்கவில்லை என்றால் நான் நடிப்பை விட்டு விடுகிறேன் என்று கூறினாராம். அந்த அளவுக்கு அவருக்கு இப்படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.

அதன் பிறகு படம் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை வாங்கியது. மேலும் இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து எஸ் வி சேகர் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார். நடிப்பு தவிர இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்று அடுத்தடுத்து பல சாதனைகள் புரிந்தார். தற்போது தீவிர அரசியலில் இறங்கி இருக்கும் இவர் 2018 இல் வெளிவந்த டிராபிக் ராமசாமி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்