மீண்டும் வடசென்னை நடிகருடன் கூட்டணி.. இதுலயாவது அவர உயிரோட விடுவீங்களா?

2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதில் தனுஷுடன் பிரபல இயக்குனர்களான அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருப்பார்கள்.

அத்தகைய இவர்களது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஏனென்றால் நடிகர் தனுஷ் தற்போது ‘மாறன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் அமீருடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அமீருக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகர் தனுஷ் அசுரன், பட்டாசு, கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்துக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது சிம்பிளிசிட்டி மற்றும் சிறந்த நடிப்பிற்காகவே நாளுக்கு நாள் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் ‘மாறன்’ திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகன், சுமத்தி வெங்கட், சமுத்திரகனி, மகேந்திரன் போன்றவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ்  இசையமைக்கிறார்.

அத்துடன் நடிகர் தனுஷ், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தில் தனுஷ், ராசி கண்ணா, பாரதிராஜா, நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் இவர்களது நடிப்பில் வெளிவரப் போகிறது. இந்த படத்திற்காக அனிருத் இசையமைக்கிறார்.

maaran
maaran

எனவே நடிகர் தனுஷ் நடித்து வரும் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவர் நடித்து விரைவில் வரவிருக்கும் படங்களை இவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்