வாய்ப்பு கொடுத்த தனுசையே பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்

Dhanush upset on Nayanthara: தானம் குடுக்குற மாட்ட பல்லு புடிச்சு பதம் பார்க்காதன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க, அது நயன்தாரா விஷயத்தில் சரியா போச்சு. நயன்தாரா என்றாலே சர்ச்சை தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் தன்னுடைய வேலையை காட்ட கூடாத இடத்தில் காட்டி கடைசியில் ஒரு ஊரே கூடி இருக்கும் இடத்தில் பெரிய பல்பு ஒன்றை தன்னுடைய காதல் கணவரோடு சேர்ந்து வாங்கி இருக்கிறார் நம்ம லேடி சூப்பர் ஸ்டார்.

நயன்தாராவுக்கு சினிமா வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் தான். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் கீழே விழும் போது கை கொடுத்து தூக்க யாராவது ஒருத்தர் இருப்பார்கள். அதில் ரொம்பவும் முக்கியமானவர்தான் நடிகர் தனுஷ். யாரடி நீ மோகினி படத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல ஒரு நட்பு இருந்தது.

நயன்தாராவுக்கு பிரபுதேவா உடன் பிரேக்கப் ஆன பிறகு சினிமா வாய்ப்பில்லாமல் இருந்தார். அப்போது எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் அவரை ஆட வைத்து மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நயன்தாராவின் ஞாபகப்படுத்தியது தனுஷ் தான். அதேபோன்று அவருடைய சினிமா மார்க்கெட் டல் அடித்துக் கொண்டிருக்கும் போது காதம்பரி என்னும் கேரக்டர் மூலம் மீண்டும் அவரை தூக்கி விட்டது தனுஷ் தான்.

Also Read:கூட்டாளி சம்பளத்தை கேட்டு வயித்தெரிச்சலில் 5 நடிகர்கள்.. குடிக்க மட்டுமில்ல குளிப்பதற்கும் பன்னீர் கேட்கும் தனுஷ்

நானும் ரவுடிதான் படத்தின் கதையை நிறைய பேரிடம் சொல்லி யாருமே அதற்கு ஒத்து வராத போது தனுஷ் முன் வந்து விக்னேஷ் சிவனை இயக்குனர் ஆக்கி, அந்த படத்தை தயாரித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே விக்கி மற்றும் நயனுக்கு காதல் மலர்ந்து விட்டது. பாதி நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இல்லாமல் இந்த காதல் கிளிகள் இஷ்டத்திற்கு வெளியில் பறக்க, தயாரிப்பாளரான தனுஷுக்கு இது பெரிய பிரச்சனையாகவே இருந்து வந்தது.

படமும் ஒரு வழியாக ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. இது போன்ற ஒரு சமயத்தில் விருது விழா ஒன்றில் தனுஷ் தயாரித்த காக்கா முட்டை மற்றும் நானும் ரவுடிதான் இரண்டு படங்களுமே விருதுகள் வாங்கியது. அந்த சமயத்தில் தயாரிப்பாளராக மேடை ஏறிய தனுஷ் காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யாவை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளிவிட்டார். ஆனால் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாராவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Also Read:சக நடிகைகளை அசிங்கப்படுத்திய 5 நடிகர்கள்.. நயன்தாராவை பேசி சூனியம் வைத்து கொண்ட ராதாரவி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்