தலைவா என கூப்பிட்ட நடிகை.. சூப்பர் ஸ்டாரை வைத்து பாடம் எடுத்த தனுஷ்

தமிழ் சினிமாவில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் மிகப்பெரிய உயரத்தை எட்டி இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் ஏற்கனவே பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் அத்ரங்கி ரே என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அதனால் இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக இறங்கியுள்ளனர். மேலும் இப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் தன்னை பற்றிய பல விசயங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் தனக்கு சிறுவயதிலிருந்தே சமையல் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், அது ஒரு தெய்வீகமான கலை என்றும் கூறியுள்ளார்.

சமையலை தவிர்த்து தனக்கு இளையராஜாவின் இசை மிகவும் பிடிக்கும் என்று கூறிய தனுஷ் இளையராஜாதான் என் கடவுள் அவரை நான் மிகவும் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தவிர நான் எத்தனை படங்கள் நடித்தாலும் அதற்கு கிடைக்கும் அத்தனை பாராட்டுகளும் அந்த படத்தின் இயக்குனருக்கு தான் சொந்தம். இதனால் நான் ஒரு இயக்குனராவதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை சாரா அலி கான், தனுஷை பார்த்து தலைவா என்று அடிக்கடி கூறுவாராம். அதை பற்றி பேசிய தனுஷ் தன்னை அப்படி கூப்பிட வேண்டாம், தலைவர் என்றால் அது ரஜினி சார் மட்டும் தான் என்று கூறியுள்ளார். ஆனாலும் சாரா அதை காதில் வாங்கி கொள்ளாமல் தனுஷை தலைவா என்று கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட தனுஷ் அத்ரங்கி ரே திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்