அரைடஜன் படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ்.. கஸ்தூரிராஜா போடும் பலே ஸ்கெட்ச்

Actor Dhanush owns 6 films and will direct films also: சினிமா ஒருவரது வாழ்க்கையில் எப்படிப்பட்ட மேஜிக் செய்யும் என்பதற்கு தனுஷும் அவரது குடும்பமும் தான் உதாரணம். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தனுஷ், செல்வராகவன், திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தனர்.

முதல் படத்தில் பல கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான தனுஷ் தனது கடின உழைப்பின் மூலம் கைவசம் அரை டஜன் படங்களோடு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார், 

தனுஷ் கமிட் ஆகியுள்ள  ஆறு படங்களின் லிஸ்ட் இதோ,

குபேரா: தெலுங்கு இயக்குனர் சேகர் கம்லாவின் இயக்கத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு குபேரா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் தோன்ற உள்ளாராம் தனுஷ். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே ஹைப்பை எகிற வைத்துள்ளது.

இளையராஜா: இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனுஷ், இளையராஜா கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார். இதனை இயக்க அருண் மாதேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தரமான காதல் கதை தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். இதில் அவரது சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார்.

ராயன்: ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ராயன் திரைப்படத்தில் தனுஷ் உடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் இணைந்துள்ளனர். கோடை விடுமுறையை ஒட்டி ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் 2: 2010ஆண்டு கார்த்தி மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த புதிதில் தாக்கத்தை ஏற்படுத்தாத போதும் பின்னால் அதைப் புரிந்து கொண்டு ரசிகர்கள் கொண்டாடினர்.

ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க இதன் அடுத்த பாகத்தை செல்வராகவன் இயக்க உள்ளாதகவும், இதில் தனுஷ் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாதகவும் தகவல்.

புதுப்பேட்டை 2: 2006 தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை இவரது சினிமா கேரியரில் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த ஆண்டில் கண்டிப்பாக இதன் அடுத்த பாகத்தை இயக்க உள்ளதாக செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷின் சில படங்களுக்கு  அவரது தந்தை கஸ்தூரிராஜா தான் தயாரிப்பாளர். தனது மகனின் வளர்ச்சிக்காக தனுஷின் பெருமைகளை புகழ்பாடி வட இந்தியாவிலும் சில ப்ரொடியூசர்களை இவரது படங்களுக்கு முதலீடு செய்ய வளைத்துப் போட்டு வருகிறாராம் கஸ்தூரிராஜா.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை