அண்ணாந்து பார்க்க வைத்த தனுஷின் மொத்த சொத்து மதிப்பு.. 40 வயதில் பல கோடிக்கு அதிபதி

Dhanush Net Worth: தனுஷ் தனது தந்தை இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் ஆகியோரால் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றவர் தனுஷ். வருடத்திற்கு வருடம் அவருடைய வளர்ச்சி விஸ்வரூப அடைந்துள்ளது. அதேபோல் அவரது சம்பளமும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

தற்போது தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50 வது படத்தை தனுஷ் தானே இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த சூழலில் இன்று தனது 40 வது பிறந்தநாளை தனுஷ் கொண்டாடுகிறார்.

Also Read : அசுர வேகத்தில் தனுஷ் வளர காரணமாக இருந்த 5 வெற்றி படங்கள்.. சவுக்கடி கொடுத்த பொல்லாதவன்

தனுஷ் பற்றிய நிறைய செய்திகள் இன்று இணையத்தில் உலாவத் தொடங்கி இருக்கிறது. அதன்படி அவருடைய சொத்து மதிப்பை இப்போது பார்க்கலாம். அந்த வகையில் தன்னுடைய 40 வயதில் பல கோடிக்கு அதிபதியாக தனுஷ் இருக்கிறார். தனுஷுக்கு ஆழ்வார்பேட்டையில் பல கோடி மதிப்பில் சொந்த வீடு இருக்கிறது.

ஆனால் சமீபத்தில் சென்னையில் முக்கிய பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் 150 கோடியில் மிகப்பெரிய பங்களா ஒன்றை கட்டி இருக்கிறார். சினிமாவை தவிர மற்ற தொழில்களிலும் தனுஷ் முதலீடு செய்த வருகிறார். மேலும் வுண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

Also Read : தனுஷ் அதிரடியாய் கலக்கிய சமீபத்திய 6 படங்கள்.. சைக்கோவாய் மிரட்டிய நானே வருவேன்

மேலும் தனுஷ் தான் சம்பாதிக்கும் பெரும்பாலான தொகையை காரில் தான் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் அவரிடம் அதிகபட்ச விலையில் உள்ள கார் என்றால் 6.3 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் தான். அடுத்ததாக 3.5 கோடிக்கு பெண்ட்லி என்ற காரை வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து 98 லட்சம் மதிப்புள்ள ஃபோர்ட் மஸ்டாங்க், 45 லட்சம் மதிப்புடைய ஜாகுவார் XE கார்களும் தனுஷ் கைவசம் இருக்கிறது.

மேலும் இன்னும் கோடியில் ஆடி 48, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களையும் வாங்கி சேர்த்து வைத்துள்ளார். தனுஷ் தற்போது வரை 300 கோடிக்கு அதிகமான சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறாராம். கடின உழைப்புக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது தனுஷின் வாழ்க்கையில் நடந்தேறி உள்ளனர்.

Also Read : 51வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்.. கடைசியில் வடசென்னை ரசிகர்களுக்கு கொடுத்த கல்தா

Sharing Is Caring:

அதிகம் படித்தவை