தனுசுடன் மல்லுகட்ட போகும் நடிகர்… உண்மையை உடைத்த ஜிவி பிரகாஷ்

Actor Dhanush directs next film: தனுஷின் ஃபேமஸ் டயலாக் ஆன “எங்கள மாதிரி பசங்கள பார்த்தா பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும்” என்பது பலரின் பஞ்ச். அதேபோல் அவருக்கும் தான் நடித்த முதல் படத்தில் பெரிய அளவு ஸ்கோப்  இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த படங்களின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி கடகடவென முன்னுக்கு வந்தார்.

நடிப்பை தாண்டி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிய தனுஷிற்கு என்றும் ஏறுமுகம் தான். பல விருதுகளையும் தனதாக்கிக் கொண்ட தனுஷ் கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என கட்டம் கட்டி வருகிறார்.

வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்களாவது கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி விடுவார் தனுஷ். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், வாத்தி இரண்டுமே கதை ரீதியாகவும் வசூல் மழையிலும் பின்னி பெடல் எடுத்தது.

Also read: அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்

தனுஷ் தற்போது நடித்து முடித்து இருக்கும் கேப்டன் மில்லர் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது அடுத்த படமான D50 யில் கவனம் செலுத்தி வருகிறார். ராஜ்கிரண் ரேவதி நடித்த பா பாண்டி மூலம்  இயக்குனராக அவதாரம் எடுத்த தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்போது தனது அடுத்த படமான D50 யை அவரே இயக்கப் போவதாகவும் தகவல்.

ரசிகர்கள் எதிர்பார்க்கும் D50 யில் கேங்ஸ்டர் ஆக தோன்ற உள்ளார் தனுஷ். தனுசுடன் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன் என பலரும் நடிக்க உள்ளனர் மேலும் இப்படத்திற்கு இசை அனிருத் என பிக்ஸ் செய்த நிலையில், திடீரென இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பாளராக மாற்றப்பட்டார்.

D50 யை அடுத்து பெயரிடபடாத படத்தில் திரும்பவும் இயக்குனராக களமிறங்க உள்ளார் தனுஷ். தனது உறவினர் மல்லுக்கட்டில் நடித்த வருணை வைத்து இயக்கப் போவதாகவும் படத்தில் கெஸ்ட் ரோலில் வரப்போவதாகவும் செய்தி. இதற்கும் இசை ஜிவி பிரகாஷ் குமார் என நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்து உள்ளார் ஜீவி. சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடந்ததையடுத்து டிசம்பர் 12 ல் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Also read: அள்ளிக் கொடுக்கும் மனைவியின் மூலம் ஆதாயம் அடையும் 5 நடிகர்கள்.. ஜெயம் ரவிக்கும், அருண் விஜய்க்கும் இன்று வரை கை கொடுத்த உறவு