என்ன பத்தி நிறைய சர்ச்சை வரட்டும், அப்பதான் சம்பளத்தை ஏத்த முடியும்.. உஷாராக இருக்கும் 43 வயது நடிகர்

தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு உயர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் தற்போது தன்னைப் பற்றிய சர்ச்சைகள் அதிகமாக வர வேண்டும் என்றும், அப்படி வந்தால்தான் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தைத் தொடும் எனவும் மிகப்பெரிய பிளான் ஒன்றை போட்டுள்ளாராம்.

கடந்த சில மாதங்களாகவே இந்த முன்னணி நடிகரை பற்றிய பேச்சுக்கள் தான் இந்திய சினிமாவில் அதிகமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு படத்தில் உச்சத்தைத் தொட்டார் என்றால் நம்ப முடிகிறதா.

சமீபத்தில் வெளியான அந்த முன்னணி நடிகரின் படம் ஒன்றில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றவர் அந்த நடிகர். அதனைத் தொடர்ந்து அந்த நடிகருக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

ஆனால் அந்த நடிகரைப் பற்றி சமீபகாலமாக ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கின்றன. நடிகையுடன் தொடர்பு எனவும், அதிக அளவில் சம்பளம் கேட்கிறார் எனவும் சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதை பார்த்தும் பார்க்காமல் இருக்கிறாராம்.

இது பற்றி தன்னுடைய நண்பர் வட்டாரங்கள் தெரிவித்து போது, சர்ச்சைகள் அளவுக்கதிகமாக வந்தால் தான் சம்பளம் நினைத்ததை விட அதிகமாக கிடைக்கும் என ஆறுதல் சொன்னவர்களை வாயடைக்க வைத்து விட்டாராம்.

அந்த நடிகரின் ஒரே ஒரு குறிக்கோள் பணம் தான் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. பெயர் கெட்டாலும் பரவாயில்லை பணம் சம்பாதித்தால் போதும் என்ற சிந்தனையில் இருக்கும் இந்த நடிகரை என்னவென்று சொல்வது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்