உச்ச நடிகராக இருந்து பின்னர் ஒரு பாட்டில் சரக்குக்கு கையேந்திய பிரபல நடிகர்.. பெண்ணால் அழிந்த சோகம்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து மிக ஆடம்பரமாக வாழ்ந்த நடிகர் ஒருவர் தன்னுடைய கடைசி காலகட்டங்களில் ஒரு பாட்டில் சரக்கு கேட்டு மற்றவர்களிடம் கையேந்தி நின்ற அவலநிலை கோலிவுட் சினிமாவில் நிகழ்ந்துள்ளது.

சினிமாவைப் பொருத்தவரை ஆரம்பத்தில் என்னதான் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தாலும் ஒரு கட்டத்தில் பணம் காசு அதிகமாக பார்த்த பிறகு அவர்களது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுவது சகஜமானதுதான்.

அப்படி பேரும் புகழும் கொண்ட காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் சந்திரபாபு. இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார். அப்போதே ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகராகவும் வலம் வந்தார்.

சந்திரபாபுவின் திருமணம் தான் அவருடைய வாழ்க்கையை திசை மாற்றி விட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக தெரிவித்துள்ளார். சந்திரபாபு அவரது பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் முதல் இரவில் அந்த பெண் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், விருப்பம் இல்லாமல் தான் உங்களை திருமணம் செய்து கொண்டேன் எனவும் கூறி விட்டாராம்.

இதனால் ஒரு நிமிடம் அதிர்ந்து போன சந்திரபாபு இரவோடு இரவாக அந்த பெண்ணை அவரது காதலருடன் சேர்த்து வைத்து விட்டாராம். அதன்பிறகு குடிக்கு அடிமையான சந்திரபாபு கடைசி காலகட்டங்களில் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அழித்து ஒரு பாட்டில் சரக்கு கேட்டு தன்னுடைய நண்பர்களிடம் கையேந்தி நின்றாராம்.

அதற்கு காரணம் அவரது ஆடம்பரமும் தான் எனவும் கூறுகின்றனர். சொகுசு வாழ்க்கை பிரியரான சந்திரபாபு அந்த வகையிலும் பல சொத்துக்களை இழந்து விட்டாராம். சந்திரபாபு நடித்த படங்களில் உங்கள் மனதை கவர்ந்த கதாபாத்திரம் என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.

chandrababu-cinemapettai
chandrababu-cinemapettai