அசோகன் இறப்பிற்கு எம்ஜிஆர் ஒரு காரணமா.? வெளிப்படையாக போட்டு உடைத்த மகன்

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான வசன உச்சரிப்பாலும், கணீர் குரலாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அசோகன். இவர் ஒரு சிறிய வசனத்தை கூட நீட்டி முழக்கி பேசி அதை ரசிகர்கள் ரசிக்கும் படி செய்த பெருமைக்குரியவர்.

தமிழில் ஔவையார் என்ற திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்த இவருடைய திரைப்பயணம் ஒரு வாரிசு உருவாகிறது என்ற திரைப்படத்தோடு முடிந்தது. அதில் அலாவுதீனும் அற்புத விளக்கும், அடிமைப்பெண் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இன்றும் நம் நினைவை விட்டு நீங்காதவை.

இவர் நடிகர் எம் ஜி ஆரின் நெருங்கிய நண்பர். எம்ஜிஆர் அரசியலில் தீவிரமாக இறங்கிய பின் அவரால் சினிமாவில் நடிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் பல படங்கள் ஆரம்பிக்கபடாமல் நின்று போனது. அந்த படங்களில் எல்லாம் நடிகர் அசோகனும் கமிட்டாகி இருந்தார்.

இப்படி படங்கள் அனைத்தும் நின்று போனதால் அவருக்கு படவாய்ப்புகளும் வெகுவாக குறைந்தது. மேலும் அசோகன், எம்ஜிஆரை வைத்து நேற்று இன்று நாளை என்ற படத்தை தயாரித்தார். அந்தப்படத்தில் எம்ஜிஆர் நடிக்கும் போது சில அரசியல் நெருக்கடியால் அவரால் கால்ஷீட் சரியாக கொடுக்க முடியாமல் போனது.

இதனால் அசோகனுக்கு சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. அதில் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதை எம்ஜிஆரை பிடிக்காத சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். எம்ஜிஆரால் தான் அசோகனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது என்று தவறாக கதை கட்டி விட்டனர்.

பின்னாளில் அசோகன் இறந்த பொழுது கூட எம்ஜிஆரால் தான் அவர் இறந்து விட்டதாகவும் கதை பரப்பினர். இந்த செய்தி அப்பொழுது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அசோகன் இறந்ததற்கு எம்ஜிஆர் காரணம் இல்லை என்று நடிகர் அசோகனின் மகன் வின்சென்ட் அசோகன் தற்போது தெரிவித்துள்ளார்.

நடிகர் வின்சென்ட் அசோகன் தன் தந்தை எம்ஜிஆரை வைத்து படம் இயக்கி சிறிய அளவில் நஷ்டம் ஏற்பட்ட போதுஎம்ஜிஆர் அந்த நஷ்டத்திற்கு ஈடாக நான்கு மடங்கு பணத்தை கொடுத்து உதவியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன் தந்தைக்கு இருந்த சில தவறான பழக்கங்கள் தான் அவரின் மரணத்திற்கு காரணம் என்றும் தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு தங்கள் குடும்பத்தை எம்ஜிஆர் நன்றாக கவனித்து கொண்டதாகவும் கூறியுள்ளார். என்னை படிக்க வைத்தது கூட எம்ஜிஆர் தான் அப்படிப்பட்ட நல்ல மனிதரை பற்றி ஏன் இப்படி பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை என வின்சன்ட் அசோகன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

vincentashokan
vincentashokan

Next Story

- Advertisement -