டாடா, லியோ என கலக்கும் இரட்டை குழந்தைகளின் புகைப்படம்.. வாரிசுகளை களம் இறக்கிய பிரபல காமெடியன்

இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் டாடா. கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடித்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டாடா திரைப்படத்திற்கு முழுக்க முழுக்க இதுவரை பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.

கல்லூரி படிக்கும் மாணவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு குழந்தைக்கு அப்பாவாகி அந்த குழந்தையை வளர்ப்பது தான் இந்த படத்தின் கதை. காதல், நட்பு, காமெடி, ஏமாற்றம், பாசம் என அத்தனை உணர்வுகளையும் ஒரு சேர கலந்து கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு.

Also Readஅஜித்தின் இடம் அடுத்தது கவினுக்கு தான்.. 3 படத்துக்குகே இவ்வளவு பெரிய பில்டப்பா!

இந்த டாடா திரைப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் இணையாக கவனிக்கப்பட்டது இவர்களின் மகனாக நடித்த இலன் என்னும் சிறுவன் தான். முதல் படத்திலேயே இந்த சிறுவன் தன்னுடைய நல்ல நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருந்தான் . இதற்கு இடையில் இந்த சிறுவன் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், டிக் டிக் போன்ற தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் அர்ஜுன். அது மட்டும் இல்லாது தற்பொழுது இவர் நிறைய படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து வருகிறார். நடிகர் அர்ஜுனின் மகன் தான் டாடா திரைப்படத்தில் நடித்த சிறுவன் இலன்.

Also Read: எதிர்பாராத ஓபனிங் கொடுத்த கவின்.. முதல் நாள் வசூலில் பட்டையைக் கிளப்பிய டாடா

நடிகர் அர்ஜுனுக்கு இலன் என்ற ஒரு மகன் மட்டும் இல்லை, இயல் என்ற மகளும் இருக்கிறார். இலன் மற்றும் இயல் இருவருமே இரட்டைக் குழந்தைகளாம். நடிகர் அர்ஜுனே இதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். இப்போது அர்ஜுனனின் மகன் இலன் மட்டும் சினிமாவில் அறிமுகமாகவில்லை. அவருடைய மகள் இயலும் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார்.

dada-leo-kids
dada-leo-kids

இயல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். லியோ திரைப்படத்தின் பூஜையின் போது வெளியான புகைப்படங்களில் இயலும் இருக்கிறார். நடிகர் அர்ஜுனும் அந்த நேரத்தில் லியோ படத்தின் பூஜை புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன் மகள் இந்த படத்தில் அறிமுகமாக போவதை தெரிவித்து இருந்தார்.

arjun-actor
arjun-actor

Also Read: இதுக்கு ஏன் 10 வருஷம் உழைச்சாங்கன்னு தெரியல! கவினின் டாடா சொதப்பிய 6 விஷயங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்