அடேங்கப்பா புஷ்பா 2 ஓடிடி பிசினஸ் இத்தனை கோடியா.! திமிங்கலத்தை தட்டி தூக்கிய நிறுவனம்

Pushpa 2: அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தான் இப்போது ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் அன்று வெளியான டீசர் பயங்கர வைரல் ஆனது.

அது படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கும் வித்திட்டது. வரும் ஆகஸ்ட் 15 ஐ குறி வைத்திருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன.

இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமை பிசினஸ் புது சாதனையை படைத்திருக்கிறது. எப்போதுமே டாப் ஹீரோக்களின் படங்களை வாங்க ஓடிடி நிறுவனங்கள் நீ நான் என போட்டி போட்டு கொண்டு வருவார்கள்.

புஷ்பா 2 டிஜிட்டல் உரிமை

இப்படத்திற்கும் அதேபோல் கடுமையான போட்டி இருந்தது. அந்த ரேசில் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜெயித்துள்ளது. அதுவும் 275 கோடியை கொடுத்து வாங்கி இருக்கிறது.

இதுதான் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதற்கு முன்பாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் டிஜிட்டல் உரிமை 170 கோடிக்கு விற்கப்பட்டது.

தற்போது அதை ஓவர் டேக் செய்து சாதனை படைத்திருக்கிறது புஷ்பா 2. இதை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம் நெட்பிளிக்ஸ் தளமும் பெரும் லாபத்தை பார்க்க காத்திருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்