பாலைவனத்தில் தண்ணீர் தாகத்தில் ஓய்வெடுக்கும் தல அஜித்.. வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமல்லாது பல துறைகளிலும் தன் திறமையை காட்டி வருகிறார்.

இவர் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தற்போது வலிமை என்னும் படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் தற்போது தனது பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அந்த பயணத்தின் போது அஜித்தை பார்க்கும் ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர். பொதுவாக அஜித் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை.

ஆனால் ரசிகர்கள் விருப்பத்திற்காக அவர்களுடன் இணைந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகின்றன.

தற்போது அஜித் பைக் பயணமாக காட்மண்டூர் சென்று திரும்பும் வழியில் ஒரு பாலைவனத்தில் ஓய்வு எடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அஜித் கையில் தண்ணீர் பாட்டிலுடன் மண் தரையில் அமர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

வலிமை படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் அவர்கள் அஜித் பைக்கில் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு அவரை பாராட்டி வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்