வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சம்பள விஷயத்தில் விஜய்யவே யோசிக்க வைக்கும் அஜித்.. எப்புட்றா என வயிறு எரிஞ்சி புலம்ப வைத்த ஏ கே

Ajithkumar – Thalapathy Vijay: அஜித்தை பொருத்த வரைக்கும் அவருடைய சினிமா பாதையில் வெற்றி என்பதை தாண்டி நிறைய தோல்விகளை சந்தித்தவர். நிறைய பிளாப் படங்களை கொடுத்து ஒரு நடிகர் முன்னணி ஹீரோவாக இருக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு சிறந்த பதில் அஜித் மட்டும் தான். அவரை அப்படி அவருடைய ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகிறார்கள்.

ஒரு சில வருடங்களாகவே அஜித்துக்கு பெரிய அளவில் வசூல் கொடுத்த படங்கள் என்று எதுவுமே இல்லை எனலாம். அதை மொத்தமாக மாற்றியதுதான் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம். இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. அடுத்து அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விடாமுயற்சியை தான்.

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த நான்காம் தேதி தொடங்கி இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். பிரியாமணி மற்றும் ஆரவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பிரபல நடிகர் சஞ்சய் தத் அஜித்துக்கு வில்லன் ஆகிறார். இந்த படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூட சொல்லப்படுகிறது.

பல முன்னணி ஹீரோக்களும் தங்களுடைய அடுத்த படங்களை பற்றி அப்டேட் மேல் அப்டேட் ஆக கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அஜித்தை பற்றி எந்த அப்டேட்டும் வரவில்லை என்று சோகப்பட்டு கொண்டு இருந்த அவருடைய ரசிகர்களுக்கு ஆறுதலாக வந்திருக்கும் அப்டேட் தான் அவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது.

ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் மிகத் தீவிர ரசிகர் நேர்கொண்ட பார்வை படத்தில் கூட ஒரு சின்ன கேரக்டரில் இவர் நடித்திருந்தார் .சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் கூட அஜித் பற்றி ஒரு காட்சி வைத்து பெரிய வரவேற்பு பெற்றார். ஒரு ஃபேன் பாயாக இவர் அடுத்து அஜித்தை இயக்க இருக்கிறார் என்ற சந்தோஷத்தை விட அந்தப் படத்தில் அஜித்தின் சம்பளம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜித்தின் படங்கள் ஓடவே இல்லை, பொருளாதார ரீதியாக வெற்றி பெறவில்லை என ஒரு பிம்பம் எப்போதுமே சினிமாவில் இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு அவருக்கு 175 கோடி சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. படமே ஓடவில்லை என்றாலும் அஜித் விஜய்க்கு நிகரான சம்பளத்தை வாங்க இருக்கிறார்.

- Advertisement -

Trending News