அஜித்துக்கு நெருக்கமான 5 பிரபலங்கள்.. இவங்க 2 பேர் இல்லாத அஜித் படமே இல்ல!

பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் நடிகர் அஜித்குமார் என்றால் அவர் அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டார், நெருங்க மாட்டார் என்பதுதான். ஆனால் நடிகர் அஜித்திற்கும் சினிமாவில் நெருக்கமான ஐந்து பேர்கள் உண்டு. அதில் இரண்டு பிரபலங்களுக்கு இவர் தொடர்ந்து தன்னுடைய படங்களில் இன்று வரை வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ரமேஷ் கண்ணா: நடிகர் மற்றும் இயக்குனர் ரமேஷ் கண்ணா அஜித் குமாருக்கு நெருக்கமானவர் என்பது தமிழ் சினிமா உலகிற்கே தெரிந்த ஒன்று. அஜித் பற்றி நிறைய சுவாரசியமான தகவல்களை ரமேஷ் கண்ணா அவருடைய பேட்டிகளில் பகிர்ந்து இருக்கிறார். அதே போன்று நடிகர் அஜித்தும் அவர் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ரமேஷ் கண்ணாவுக்கு வாய்ப்புகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read:அஜித் விஜய்க்கு அடுத்த வரிசையில் இருக்கும் ஐந்து ஹீரோக்கள்.. தொடர் தோல்வியால் வாய்ப்பு இழந்த விக்ரம்

மகாநதி சங்கர்: கோலிவுட் சினிமாவிற்கு தளபதி விஜய் என்பது போல் எப்போதும் தல அஜித் குமார் தான். ஒரு சில காரணங்களால் அஜித் தன்னை தல என்று யாரும் கூப்பிட வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அஜித்திற்கு தல என்ற பெயரை தீனா படத்தில் வைத்ததே மகாநதி சங்கர்தான். தீனா படத்திற்கு பிறகு அஜித் நிறைய படங்களில் இவருக்கு வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்: நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் அஜித்குமார் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டு ஆசை என்னும் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதிலிருந்தே இவர்களுடைய நட்பு தொடர்ந்து வருகிறது. மேலும் ராசி மற்றும் பரமசிவன் போன்ற படங்களிலும் இருவரும் நடித்திருக்கின்றனர். அஜித்குமார் சினிமா வட்டாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜிடமும் நெருக்கமான நட்புடன் பழகி வருகிறார்.

Also Read:விடாமுயற்சிக்கு தயாராகும் அஜித்.. யாரும் எதிர்பார்க்காததை செய்யும் மகிழ்திருமேனி

ரியாஸ் கான்: ரியாஸ் கான் தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் பிரபலமானவர். இவர்கள் இருவரும் ஜனா மற்றும் திருப்பதி போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அஜித்திற்கு உடற்பயிற்சி மற்றும் பிட்னஸில் அதிகமாக உதவி செய்து இருக்கிறார் ரியாஸ்.

பெப்சி விஜயன்: தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். மேலும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். அஜித்குமார் மற்றும் விஜயன் சேர்ந்து வில்லன் மற்றும் ஆஞ்சநேயா திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள்.

Also Read:விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டரை பற்றி வெளியான தகவல்.. யாரும் எதிர்பார்க்காத டபுள் ட்ரீட்!

- Advertisement -