விஜய் அரசியலால் சிக்கலில் மாட்டப் போகும் அஜித்தின் கேரியர்.. எல்லாத்தையும் ஒரு கை பாக்க தயாரான தளபதி

Actor Ajith will be affected by Vijay’s politics: கடந்த நான்கு வருடங்களாக அரசியலில் மெல்ல மெல்ல காலெடுத்து வைத்த விஜய், இப்போது ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை துவங்கி வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்கப் போகிறார். விஜய் அரசியலுக்கு செல்வதால், அஜித்தின் சினிமா கேரியர் தான் சிக்கலில் மாட்டப் போகிறது.

முழு நேரமும் அரசியலில் ஈடுபட போகும் விஜய், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். இதனால் அஜித்தின் சம்பளம் தான் குறையுமாம். ஏனென்றால் விஜய் சம்பளத்தை அதிகம் கேட்டால், அஜித்தும் அதிகம் கேட்டு வாங்கிக் கொள்கிறார். ஆனால் இனிமேல் விஜய் சினிமாவில் இல்லை என்றால், அஜித்துக்கு எப்படி சம்பளம் அதிகம் வரும்.

அப்படி அதிக சம்பளம் வேண்டும் என்றால், அவருடைய படம் நன்றாக ஓட வேண்டும். பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கணும். அதை வைத்து வேண்டுமானால், இனிமேல் அஜித் அதிகமாக சம்பளம் வாங்கலாம். அதோடு இவ்வளவு நாள் இருந்த தல, தளபதி இடையே நிலவிய போட்டியும் இருக்காது.

Also Read: GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சி இவங்க தான்.. வெங்கட் பிரபு வலை வீசி கண்டுபிடித்த நடிகை

விஜய்யால் அஜித்துக்கு ஏற்பட போகும் பாதிப்பு

அஜித், விஜய் இருவரும் தங்களுக்குள் போட்டி போடுவதை காட்டிலும், அவர்களுடைய ரசிகர்கள் தான் திரையரங்கை தும்சம் செய்து கொண்டிருந்தனர். இதை வைத்தே அவர்களது படங்களுக்கு தாறுமாறான வசூல் கிடைத்தது. ஆனால் அஜித், இனிமேல் தன்னிச்சையாக நின்று வசூல் காட்டினால் மட்டும்தான் அவருடைய சம்பளம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

அதே சமயம் விஜய் நினைத்தது போல் CM ஆகவில்லை என்றால், கண்டிப்பாக மீண்டும் நடிக்க வந்து விடுவார். அவர் எல்லாத்தையும் ஒரு கை பாக்க தயாராகி விட்டார். அதேசமயம் அஜித்தின் குணம் என்னவென்றால், எப்போதுமே எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். தன்னுடைய ரசிகர்களுக்காக வருஷத்துக்கு ஒரு படத்தை கொடுத்து ஜாலி பண்ணணும் என்பதற்காகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: ஆர்மி மேனாக நடித்து மிரட்டி விட்ட டாப் 9 ஹீரோக்கள்.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அமரன்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை