புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

குடும்பத்திற்காக முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அஜித்.. துபாய்யில் ஆக்ரோஷமாக கொந்தளித்த சம்பவம்

Actor Ajith warned and deleted his photos from his fan in dubai: ஒருவரின் சுதந்திரம் என்பது அடுத்தவரின் மூக்கின் நுனி வரை மட்டுமே. மூக்கை தொடுவது அல்ல.  சில நேரங்களில் மக்கள் ஆர்வக்கோளாறு காரணமாக அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.  இந்த வாடிக்கையை வேடிக்கை பார்ப்பவர் அல்ல நம்ம தல.

துணிவின் வெற்றிக்கு பின் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில்  இணைந்துள்ளார் அஜித். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் மற்றும் திரில்லர் படங்களில் தடம் பதித்த மகிழ்த்திருமேனி மற்றும் அஜித்தின் கூட்டணியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

புத்தாண்டு மற்றும் தனது மகள் அனுஷ்காவின் பிறந்த நாளை கொண்டாடும் பொருட்டு விடாமுயற்சிக்கு கொஞ்சம் விடுமுறை விட்டு துபாய்க்கு சென்றுள்ளார் அஜித். அங்கு அஜித் விளையாடுவது, சொகுசு படகில் பயணிப்பது, ஆடுவது, புகைப்படம் எடுப்பது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என ரிலாக்ஸாக இருந்து வருகிறார்.

Also Read: அஜித் பொண்ணுக்கு 16 வயசு ஆயிடுச்சா.! ஷாலினியை மிஞ்சிய அனோஷ்காவின் லேட்டஸ்ட் போட்டோ

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் அவர் குடும்பத்துடன் இருக்கும்போது அவரது அனுமதி இன்றி புகைப்படம் எடுத்தது அஜித்திற்கு கோபத்தை கிளப்பி உள்ளார் உடனே அவரை கூப்பிட்டு டெலிட் செய்யுமாறு கூறியுள்ளார் இந்த  வீடியோ வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் தவறாக சித்தரித்து வருகின்றனர்.

இதே போல் சட்டப்பேரவை தேர்தலின் போது அஜித்  மற்றும் ஷாலினி வாக்களிக்க நின்று கொண்டிருக்க ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது அவரின் செல்போனை வாங்கி கண்டித்தார் அஜித்.

பிரபலங்கள் வாழ்க்கையில் இது சகஜம் தான் என்றாலும் மனிதர்கள் தன்னுடைய விருப்பத்திற்காக அடுத்தவரின் சுதந்திரத்தில் தலையிடாமல்  இருப்பது நன்று. தன் குடும்பத்திற்காக அவர்களின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்கும் போவேன் என்று மீண்டும் நிரூபித்து உள்ளார் அஜித்.

Also Read: அஜித்துக்கு புடிச்சா எனக்கும் புடிக்கணுமா? முரண்டு பிடிக்கும் இயக்குனர்.. விடாமுயற்சிக்கு விடாமல் விழும் அடி

- Advertisement -

Trending News