18 வருடங்கள் துணை நடிகராகவே நடித்த ஹீரோ! பணம் இல்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிடும் நிலை.!

2002 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் துள்ளுவதோ இளமை. இந்தப் படம் பள்ளியில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த ஆண்டு கஸ்தூரிராஜா மற்றும் தனுஷ் கூட்டணிக்கு இது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தில் தனுஷ் ஷெரின்,அபினய், என அனைவரும் புதுமுகங்கள்தான். அவர்களைத் தவிர ரமேஷ் கண்ணா, பிரமிட் நடராஜன், தலைவாசல் விஜய் போன்றவர்கள் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் தனுசுடன் இரண்டாவது ஹீரோவாக நடித்தவர் அபினய்.

அபினய்.துள்ளுவதோ இளமை நடித்த பிறகு 2 படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பின் அவருக்கு சாக்லேட் பாய் என்னும் முத்திரை விழுந்தது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் முத்திரை விழுந்துவிட்டால் அதை மீறி ஆக்சன் படங்களில் நடிப்பது கடினம். அதே நிலை தான் அபினய்க்கும் ஏற்பட்டது.

Actor-abinai-Cinemapettai.jpg
Actor-abinai-Cinemapettai.jpg

அவர் ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் ஓடவில்லை. அதனால் அவர் நடிக்கவிருந்த 8 படங்களும் கைவிட்டுப் போனது. விளம்பரப் படங்களிலும் நடித்து பார்த்தார் எதுவும் கை கொடுக்கவில்லை. துரதிருஷ்டவசமாக அவர் அம்மாவும் இறந்து போக வறுமையின் பிடியில் மாட்டிக் கொண்டார் அபினய்.

சமீபத்தில் அபினய் கொடுத்த பேட்டி ஒன்றில் இருந்த அனைத்தையும் விற்று விட்டேன். அம்மா உணவகத்தில் தான் சாப்பிடுகிறேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

- Advertisement -