சசிகலா சென்னை வருகை குறித்து, இணையத்தில் தாறுமாறாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, கர்நாடக சிறையில் இருந்து விடுதலையான பிறகு, பெங்களூர் உள்ள தனியார் பண்ணை வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில் இன்று காலை அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் அவரது வருகையை குறித்து பயங்கரப் பில்டப் விட்ட அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தல், பூ தூவுதல், ஆரத்தி எடுத்தல், பால்குடம் எடுத்தல் என வெட்டி பந்தா அடித்தனர்.

அது மட்டுமில்லாமல் 500 முதல் ஆயிரம் கார்கள் சசிகலா செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்தார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் நடந்ததோ வெறும் 10 கார்கள் மட்டுமே அவரை பின்தொடர்ந்து சென்றதாம்.

sasikala

மேலும் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டம் அள்ளும் என கூறப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி முதல் லொகேசனிலே வெறும் 200 முதல் 250 பேர் மட்டுமே இருந்தன. அதிலும் முக்கால்வாசிப் பேர் பத்திரிக்கையாளர்கள் தான்.

ஆகையால் வெட்டிப் பந்தா, பில்டப் கொடுக்கும் சசிகலாவை இணையத்தில் நெட்டிசன்கள் சரமாரியாக கிண்டலடித்து வருகின்றனர். அதைப்போல் சசிகலாவின் வருகையால் அதிமுகவில் எந்தவித மாற்றமும், சலசலப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதே நெட்டிசன்களின் கருத்தாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்