Tamil Cinema News | சினிமா செய்திகள்
18 பட வாய்ப்பை இழந்த தனுஷ் பட நடிகர்.. சினிமாவை மலைபோல் நம்பி வாழ்க்கை வெறுத்த சோகம்
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபினவ். இப்படத்தில் தனுஷுக்கு அடுத்தபடியாக அபினவ் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பலராலும் பரவலாக பேசப்பட்டது.
எனவே தமிழ் சினிமாவில் நிச்சயம் பெரிய அளவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவரது போதாத காலம் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 18 படங்கள் அவரது கையை விட்டு சென்றுள்ளன. இதனால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தலை காட்டியுள்ள அபிநய் தனது இரண்டாவது படத்திற்கான சம்பளம் இன்னும் 60 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது என சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

abhinay
அதுமட்டுமின்றி தனது அம்மாவிற்கு புற்றுநோய் ஏற்பட்டு சேர்த்து வைத்த பணம் முழுவதும் சிகிச்சைக்காக செலவாகி அம்மாவும் தற்போது உயிருடன் இல்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும் தனது அப்பாதான் அப்பாவுக்கு அப்பாவாக, அம்மாவுக்கு அம்மாவாக தன்னுடன் இருந்து தனக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறியுள்ளார். தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ள இவர் பல வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தான் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்களையும், இழப்புகளையும் பற்றி இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். பிரபல நடிகருக்கே இந்த நிலைமையா என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.
