அப்பாஸ் தவறவிட்ட சூப்பர் ஹிட் படம்.. மேனேஜரின் சூழ்ச்சியால் விஜய்க்கு அடித்த லக்

90 காலகட்ட தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகராக வலம் வந்தவர் தான் அப்பாஸ். அதிலும் இளம் பெண்களுக்கு இவரின் மேல் ஒரு தனி க்ரஷ் இருந்தது. ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த இவர் சில வருடங்களுக்குப் பின் வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் இப்போது ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

தற்போது வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படத்தை பற்றி கூறியிருக்கிறார்.

Also read: எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய லோகேஷ்.. வணங்கான் டிராப்பிற்கு முக்கிய காரணம் இவர் தானாம்

அதாவது அவர் பிரபலமாக இருந்த அந்த காலகட்டத்தில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு முதலில் இவருக்கு தான் வந்திருக்கிறது. அந்த படத்தின் இயக்குனர் பாசில் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என்று அப்பாஸின் மேனேஜரிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவரிடம் கதையைக் கேட்ட மேனேஜர் கால்ஷூட் இல்லை என்று ஏதேதோ காரணங்களை சொல்லி அந்த பட வாய்ப்பை மறுத்திருக்கிறார். அதன் பிறகு தான் அந்த வாய்ப்பு விஜய்க்கு சென்றிருக்கிறது. அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த விஜய் இந்த திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் அவருடைய கேரியரில் இன்றுவரை பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கிறது.

Also read: தில் ராஜூ உடன் இணையும் 100 கோடி வசூல் நடிகர்.. வாரிசு விஜய்க்கு பின் போட்ட அடுத்த ஸ்கெட்ச்

இதற்கு அடுத்து தான் அவருக்கு பல பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிப்பட்ட இந்த படத்தை அப்பாஸ் தன்னுடைய மேனேஜர் செய்தால் சூழ்ச்சியால் இழந்திருக்கிறார். இந்த படம் வெளிவந்த பிறகு ஒரு நாள் இயக்குனர் அப்பாசை தொடர்பு கொண்டு இந்த விஷயம் குறித்து கூறியிருக்கிறார்.

இப்படி ஒரு வாய்ப்பை நழுவ விட்டோமே என்று மனம் வருந்திய அப்பாஸ் இது குறித்து ஒரு பேட்டியில் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். மேலும் நான் மட்டும் அந்த படத்தில் நடித்து இருந்தால் இப்பொழுது விஜய் மாதிரி நானும் ஒரு பெரிய ஹீரோவாக மாறி இருப்பேன். ஆனால் என் நேரம் எல்லாம் தவறாக முடிந்து விட்டது. இப்பொழுது அமெரிக்காவில் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன் என்று வருத்தப்பட்டு கூறி இருக்கிறார்.

Also read: யுனிவர்சல் கூட்டணிக்காக அஜித்தை டீலில் விட்ட த்ரிஷா.. இயக்குனர் மேல் இருக்கும் அவநம்பிக்கை