ஆரம்பமே காப்பியா? ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை நாவலிலிருந்து ஆட்டைய போட்ட செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த தகவல் பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்த கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் இந்த படத்தில் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த செய்தி பல ரசிகர்களுக்கும் ஏமாற்றம் தான். அதனைத் தொடர்ந்து மேலும் செல்வராகவனுக்கு சோதனை அளிக்கும் வகையில் ஆயிரத்தில் ஒருவன்2 போஸ்டர் ஒரு குறிப்பிட்ட நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

aayirathil-oruvan-2
aayirathil-oruvan-2

பிரெஞ்சு ஓவியக் கலைஞர் மேத்யூ லாப்ரே என்ற ஆர்ட் புத்தகத்திலிருந்து அந்த போஸ்டர் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது படக்குழுவினரை சற்று சங்கடத்திற்கு உள்ளாக்கியது என்றே சொல்லலாம்.

aayirathil-oruvan-2-copied
aayirathil-oruvan-2-copied

இருந்தாலும் கார்த்தி மற்றும் ஜிவி பிரகாஷ் இல்லாமல் உருவாகும் ஆயிரத்தில் ஒருவன் படம் எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளது கூடுதல் பலம் தான் என்றாலும் முன்னதாக முதல் பாகத்திற்கு மிகச்சிறந்த இசையை கொடுத்து பெயர் வாங்கிய ஜிவி பிரகாசை, யுவன் சங்கர் ராஜா ஓவர்டேக் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story

- Advertisement -