அந்நியன் ரீமேக் என அறிவித்து வசமாக மாட்டிய சங்கர்.. நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் போட்ட கிடுக்கிப்பிடி

இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சங்கரின் சினிமா வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை. இந்தியன் 2 கைவிட்டது போக தற்போது மற்ற படங்களையும் இயக்க முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது.

கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற பெயரில் உருவாகி வந்தது. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

எதிர்பாராமல் நடந்த விபத்து மற்றும் கொரானா பிரச்சனைகள் மீண்டும் இந்தியன் 2 படம் உருவாவதற்கான சாத்தியக் கூறுகளை குறைத்துவிட்டது. அதையே நம்பினால் வேலைக்கு ஆகாது என தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படம், ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் ரீமேக்கை இயக்க உள்ளார்.

இதனைக் கேள்விப்பட்டதும் லைகா நிறுவனம் முதலில் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் மற்ற படங்களை இயக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறது. முதலில் தள்ளுபடி செய்யப்பட்ட இந்த வழக்கை தற்போது மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்கிடையில் அந்நியன் ஹிந்தி ரீமேக் உருவாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் சங்கர். இதைப்பார்த்த அந்நியன் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் உடனடியாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்நியன் படத்தின் அனைத்து உரிமைகளும் என்னிடம் தான் உள்ளது எனவும், என்னைக் கேட்காமல் அந்நியன் படத்தின் ரீமேக்கை இயக்க போவதாக ஷங்கர் கூறியது தனக்கு அதிர்ச்சி கொடுத்ததாகவும், இது சம்பந்தமாக தன்னிடம் கலந்து பேசவில்லை என்றால் பின்னால் மிகப் பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கிடுக்கிப்பிடி போடுவதால் தற்போது விழிபிதுங்கி நிற்கிறாராம் சங்கர்.

aascar-ravichandran-sent-notice-to-shankar-for-anniyan-hindi-remake
aascar-ravichandran-sent-notice-to-shankar-for-anniyan-hindi-remake
Sharing Is Caring:

அதிகம் படித்தவை