குற்றுயிரும் கொலையுயிருமாக கலங்க வைத்த பிரித்விராஜ்.. ஆடுஜீவிதம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

aadujeevitham-prithviraj
aadujeevitham-prithviraj

Aadujeevitham Collection: இந்த வருடம் மலையாள சினிமாவில் அடுத்தடுத்த தரமான படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவை கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.

அதன்படி தற்போது பிரித்விராஜ், அமலாபால் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் ஆடுஜீவிதம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உண்மை கதையை மையப்படுத்தி உருவான நாவலின் தழுவல் தான் இப்படம்.

கேரளாவில் இருந்து கர்ப்பிணி மனைவியை விட்டுவிட்டு ஹீரோ சவுதிக்கு செல்கிறார். அங்கு ஆடு மேய்ப்பவராக அடிமை வாழ்க்கை வாழும் அவர் அதிலிருந்து தப்பித்தாரா என்பது தான் கதை.

அதில் நஜீப் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் பிரித்விராஜ். குற்றுயிரும் கொலையுயிருமாக அவர் படும் கஷ்டங்கள் ஆடியன்ஸை கலங்க வைத்து விடுகிறது.

ஆடுஜீவிதம் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அந்த அளவுக்கு அவர் தன் உடலை வருத்தி நடித்திருக்கிறார். மேலும் இப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் உலக அளவில் முதல் நாளில் 15 கோடி வரை வசூலித்துள்ளது. இந்திய அளவில் 8 கோடிகள் வசூலாகி இருக்கிறது.

அடுத்தடுத்து விடுமுறை தினங்களாக இருப்பதால் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் மஞ்சுமல் பாய்ஸ், பிரமயுகம் வரிசையில் இப்படமும் விரைவில் இணைந்து விடும்.

 

Advertisement Amazon Prime Banner