16 வருஷ தவத்திற்கு கை மேல் கிடைத்த பலன்.. ஆடு ஜீவிதம் 5 நாள் வசூல் நிலவரம்

Aadu Jeevitham Collection: இந்த வருடம் மலையாளத்தில் வெளியான அடுத்தடுத்த படங்கள் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் வரவேற்பை பெறுவது ஆச்சரியம் தான்.

அதன்படி மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலு, பிரமயுகம் என அடுத்தடுத்த படங்கள் வசூலில் பல மடங்கு லாபம் பார்த்தது. அதை மிஞ்சும் வகையில் தற்போது ஆடு ஜீவிதம் பாக்ஸ் ஆபிஸை கலக்கிக் கொண்டிருக்கிறது.

உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 28ஆம் தேதி வெளியானது. பிரித்விராஜ், அமலா பால் நடிப்பில் கிட்டத்தட்ட 16 ஆண்டு கால முயற்சிதான் இப்படம்.

வசூல் வேட்டையாடும் ஆடு ஜீவிதம்

அதிலும் தன் உடலை வருத்தி கடின உழைப்பை கொடுத்து நடித்திருந்த பிரித்விராஜ் நிச்சயம் தேசிய விருதை தட்டி தூக்குவார். அந்த அளவுக்கு அவர் திரையில் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

அதுதான் படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது படம் வெளியாகி 5 நாட்கள் கடந்த நிலையில் 75 கோடிகளை வசூலித்துள்ளது.

இதை பட குழு பெருமையுடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வந்த விடுமுறை நாட்களும் இந்த வசூல் வேட்டைக்கு காரணமாக இருக்கிறது.

ஆனால் இது ஒரு சிறு பங்கு மட்டுமே. பிரித்விராஜின் அர்ப்பணிப்பான நடிப்புதான் மக்களை கொண்டாட வைத்துள்ளது. அதனாலேயே திரையிட்ட எல்லா இடங்களிலும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்