காதலித்து கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட லோகேஷின் வலதுகை.. போலீசில் புகார் கொடுத்த இளம் பெண்

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்திற்கு பிறகு விஜய் உடன் கூட்டணி போட்டு லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு இமயமலையை விட பெரிதாக உள்ளது.

இந்நிலையில் லோகேஷ் தனது ஆரம்பம் முதலே ஒரு நட்பு வட்டாரத்தில் உள்ளார். அவருடன் ஆறு, ஏழு இணை இயக்குனர்கள் பணியாற்றி வருகிறார்கள். விக்ரம் படம் வெற்றி பெற்ற போது கமல் லோகேஷின் இணை இயக்குனர்களுக்கு பைக்கை பரிசாக வழங்கினார்.

Also Read : லோகேஷ்க்கு முன்பே மல்டி யுனிவர்சை முயற்சி செய்த இயக்குனர்கள்.. பாரதிராஜா படத்துல இத கவனிச்சீங்களா!

இப்போது லோகேஷின் வலது கை ஒருவர் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளார். விக்ரம் படத்தில் இடம் பெற்ற நாயகன் மீண்டும் வரார் என்ற பாடலை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் பாடலாசிரியர் விஷ்ணு இடவன். இந்த படத்தில் இடம் பெற்ற போர் கண்ட சிங்கம் பாடலையும் இவர்தான் எழுதி இருந்தார்.

விஷ்ணு இடவன் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் லோகேஷின் இணை இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விஷயத்தை இரு குடும்பத்தினரும் பேசி திருமண ஏற்பாடும் செய்ய இருந்துள்ளனர்.

Also Read : காஷ்மீரில் இருந்து லோகேஷ் வெளியிட்ட அனல் பறக்கும் புகைப்படம்.. ஒரு வாரத்துக்கு இது போதுமே

ஆனால் விஷ்ணு இடவன் இந்தப் பெண்ணை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியுள்ளாராம். அதனால் அந்த இளம் பெண் தற்போது மகளிர் காவல் நிலையத்தில் விஷ்ணு இடவன் மீது புகார் அளித்துள்ளாராம். இப்போது தான் இவர் வளர்ந்து வரும் நிலையில் விஷ்ணு இடவன் பெயரில் களங்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடந்து வருகிறதாம். மேலும் முழு விசாரணைக்கு பின்பு தான் யார் மீது குற்றம் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வரும். சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் விஷ்ணு இடவன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : லோகேஷ்சை விஜய் படுத்தும் பாடு.. தளபதி காட்டும் ஆர்வத்தால் காஷ்மீரில் நடக்கும் கலவரம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை