பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

இந்த மாதம் 30 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் சீரியலில் இருந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இளம் நடிகை பிரியா பவானி சங்கரும் கலந்து கொண்டு பேசியபோது கௌதம் மேனனுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

சினிமாவின் மூலம் இன்று இளைஞர்களுக்கும் காதலை கற்றுக் கொடுத்தவர் நீங்கள் தான். ஆனால் தற்போது நீங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறீர்கள். என்னதான் நீங்கள் நடித்தாலும், படங்கள் இயக்குவதை மட்டுமே இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

அதனால் மீண்டும் அதிக படங்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நினைத்தால் எந்த ஹீரோவையும் எப்படி வேணாலும் மாற்றுவீர்கள். அதை மீண்டும் செய்ய ரசிகர்களும் அவருடன் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன் என்று கூறினார்.

Also Read: நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு.. பத்து தல இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

பத்து தல படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இதில் சிம்பு ஏஜிஆர் என்னும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அதிலும் கௌதம் மேனன் மட்டுமல்ல சிம்புவிற்கும் ஒரே மேடையில் பிரியா பவானி சங்கர் ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார். இவர் போட்ட ஓவர் ஐஸ்-க்கு ஜுரம் கூட வந்திருக்கும்.

Also Read: சிம்புவுடன் போட்டி போட தயாரான நடிகர்.. பத்து தலயுடன் வெளியாகும் 2 படங்கள்

இப்போதுதான் ப்ரியா பவானி சங்கர் சினிமா என்ன என்பதை புரிந்து கொண்டிருக்கிறார். இவர் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏகப்பட்ட பிட்டு போட்டதால் இனி கௌதம் மேனன் இயக்கும் படத்திலும், சிம்பு நடிக்கும் படத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க சான்ஸ் இருக்கிறது.

இவர்களை மட்டுமல்ல பத்து தல படத்தின் இயக்குனரையும் மேடையில் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ஒரு பெரிய ஸ்டாரை வைத்து படம் இயக்கும்போது இயக்குனருக்கு ரொம்ப டென்ஷன் இருக்கும். ஆனால் இயக்குனர் பத்து தல படத்தின் ஷூட்டிங்கில் ஒரு நாள் கூட டென்ஷன் ஆகி கத்தியோ, கெட்ட வார்த்தை பேசியோ பார்க்கவில்லை.

அதுமட்டுமல்ல மனித உணர்வை மதிக்க தெரிந்தவர். இவர் பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் சரி, சின்ன ஸ்டாராக இருந்தாலும் சரி சமமாக மதிப்பை கொடுப்பார். இவருடைய இயக்கத்தில் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று பிரியா பவானி சங்கர் வெளிப்படையாக பேசி உள்ளார்.

Also Read: ஒல்லியான சிம்புவை மறுபடியும் குண்டாக சொன்ன இயக்குனர்.. எரிச்சல் அடைந்து எஸ்டிஆர் செய்த செயல்

- Advertisement -