சுந்தர் சி-க்கு ஆட்டம் காட்டும் இளம் இயக்குனர்.. 6 மடங்கு அதிகமான வசூலால் ஷாக்கான திரையுலகம்

சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் காபி வித் காதல் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மிகப்பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அதே போன்று நேற்று பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே திரைப்படம் வெளியானது. ஏற்கனவே ட்ரெய்லர் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படம் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இளைஞர்கள் முதல் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு இப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Also read : ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

இப்படி அனைவராலும் கவனம் பெற்று இருக்கும் இந்த திரைப்படத்தால் சுந்தர் சி திரைப்படம் பலத்த அடி வாங்கி இருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களுமே இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டது தான். ஆனால் லவ் டுடே திரைப்படம் நல்ல என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக பார்ப்பவர்கள் என்ஜாய் செய்யும் அளவுக்கு இருப்பது தான் அந்த படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

ஆனால் இந்த விஷயத்தில் சுந்தர் சி சில பல தவறுகள் செய்திருக்கிறார். அதனால் இப்போது காபி வித் காதல் திரைப்படம் யாராலும் கவனிக்கப்படாமல் போயிருக்கிறது. அந்த வகையில் லவ் டுடே திரைப்படம் முதல் நாளிலேயே கலெக்சனை வாரி குவித்து இருக்கிறது. வெறும் 18 கோடியில் உருவான இந்த திரைப்படம் முதல் நாள் மட்டுமே ஆறு கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறது.

Also read : சுந்தர் சி-யின் பட வசூலுக்கு ஆப்படித்த இளம் இயக்குனர்.. கவனிக்கப்படாமல் போன காபி வித் காதல்

அதில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் நான்கு கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்தப் படத்துடன் ஒப்பிட்டு பார்வையில் காபி வித் காதல் திரைப்படம் வெறும் ஒரு கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அந்த வகையில் ஆறு மடங்கு அதிக வசூலை பெற்று முன்னணி இயக்குனரான சுந்தர் சிக்கு பிரதீப் ரங்கநாதன் மிகப்பெரிய போட்டியாளராக மாறி இருக்கிறார்.

மேலும் லவ் டுடே திரைப்படத்திற்கு அடுத்தடுத்து பாராட்டுக்களும், விமர்சனங்களும் குவிந்து கொண்டிருப்பதால் தற்போது ரசிகர்களின் பார்வை அந்த திரைப்படத்திற்கு திரும்பி இருக்கிறது. அதனாலேயே இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் ஏறுமுகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதனால் தற்போது இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது இதற்கான ஸ்கிரீனும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் வார இறுதி நாட்களில் இந்த திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடும் என்று சினிமா வட்டாரத்தில் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்படம் போட்ட பட்ஜெட்டை இன்னும் சில நாட்களில் எடுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read : காதலைக் கேவலப்படுத்தும் இந்த தலைமுறைக்கு செருப்படி கொடுத்த லவ் டுடே.. ட்விட்டர்ல இவங்க விமர்சனம்தான் ட்ரெண்டிங்

- Advertisement -