திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

கேரியரை சோலி முடிக்கும் நேரம் வந்தாச்சு.. அசால்டாக 50 கோடி கொடுக்க தயாராகும் சல்மான் கான், ரஜினி

சினிமாவை பொறுத்த வரைக்கும் கலைஞர்களுக்கு திடீரென்று விபரீத ஆசை ஏற்படுவது உண்டு. கூட இருப்பவர்களின் பில்டப்புகளை நம்பி நமக்கு என்ன செட் ஆகும் என்று கூட தெரியாமல் இஷ்டத்திற்கு ஏதாவது ஒன்றில் காலை விட்டுவிட்டு பின்பு பரிதவித்துக் கொண்டிருப்பார்கள். காமெடியன்கள் ஹீரோவாவது, இசையமைப்பாளர்கள் ஹீரோவாவது, திடீரென்று ஹீரோ இசையமைப்பாளராவது, ஹீரோ தயாரிப்பாளராவது இது எல்லாம் இப்படிப்பட்ட வேண்டாத ஆசையால் தான் நடக்கிறது.

அப்படித்தான் தற்போது ஒரு இளம் இயக்குனர் திடீரென்று நடிகராக களமிறங்க ஆசை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கோலிவுட் சினிமாவில் நல்ல வெற்றி படங்கள் பண்ணி தற்போது இந்திய சினிமா முழுக்க பேசப்பட்டு வரும் அந்த சென்சேஷனல் இயக்குனருக்கு தற்போது நடிக்க ஆசை வந்திருப்பதாக தெரிகிறது.

Also Read:கமலுக்கு நோ சொன்ன ரஜினிகாந்த்.. அதுவும் இந்த டாப் இயக்குனரை நழுவவிட்ட சோகம்!

பொதுவாக இது போன்ற ஆசைகள் எல்லாம் ஒரு படத்தோடு முடித்து விடலாம், இந்த கதையில் மட்டும் நடித்து விடலாம் என்று தான் ஆரம்பிக்கும். ஆனால் அதிலிருந்து கடைசி வரை வெளிவர முடியாமல் தனக்கு வராததை எல்லாம் முயற்சி செய்து தேவையில்லாத சிக்கலில் நிறைய பேர் மாட்டிக் கொள்கிறார்கள். நல்ல பேர் இருக்கும் இந்த இயக்குனர் இப்படி செய்வது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழில் மாநகரம் என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் அந்த இயக்குனர். தற்போது தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜின் படங்களில் நடிக்க நடிகர்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Also Read:கமலஹாசனை ஓடவிட்ட ரஜினி.. மேடையில் ரகசியத்தை போட்டு உடைத்த உலக நாயகன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பதான் போன்ற ஒரு வெற்றி படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தென்னிந்திய இயக்குனர்களுக்கு வலை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ் தான். அதேபோன்று தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விக்ரம் போன்று ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று ஒரு பக்கம் துடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி கோலிவுட் முதல் பாலிவுட் வரை முதல் சாய்சாக இருக்கும் லோகேஷ் கனகராஜூக்கு இவர்கள் இருவருமே 50 கோடி வரை சம்பளம் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் தற்போது ஆர் ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் என்னும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படி அவர் நடிப்பு பக்கம் வந்தால் கண்டிப்பாக அவருடைய கேரியர் முடிந்து விடும் என்பது தான் உண்மை.

Also Read:சூப்பர் ஸ்டாரால தான் அந்த படம் பிளாப் ஆச்சி.. ஷாக்கான பதிலடி கொடுத்த இயக்குனர்

- Advertisement -

Trending News