வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜாக்குலினை காப்பாற்ற பலியாடாக சிக்கிய திமிங்கலம்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்

Vijay Tv: ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே பிக் பாஸ் சீசன் சூடு பிடிக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஆட்டத்தை நின்னு கவனமாக விளையாடுகிறார்கள். இதில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வெளியில் இருந்து ரிவ்யூ கொடுத்த ரவீந்தர் உள்ளே போய் புத்திசாலித்தனமாக ஒவ்வொருவரையும் தனக்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி விளையாடி வருகிறார்.

அதே மாதிரி சர்ச்சையில் சிக்கிய அர்ணவ், அர்ஷிதா ஜோடி உள்ளே போய் நீ யாரோ நான் யாரோ என்பதற்கு ஏற்ப தனித்தனியாக விளையாடி வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து விஜய் டிவி மூலம் பிரபலமான பவித்ரா, ஜாக்குலின், தீபக், சுனிதா உட்பட பலரும் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் நின்னு ஆட்டத்தை விளையாடி வருகிறார்கள்.

இதற்கிடையில் முதல் நாளே வெளியேறிய சாச்சனா சர்ப்ரைஸ் ஆக மறுபடியும் வீட்டிற்குள் வந்து விட்டார். இந்த சூழ்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்களில் யார் வெளியேறுவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது என்று பிக் பாஸ் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கருத்து கேட்டிருக்கிறது. அதில் முக்கால்வாசி போட்டியாளர்கள் சொன்னது ரவீந்தர், சௌந்தர்யா, ரஞ்சித் இவர்களில் யாராவது போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் மக்களின் ஓட்டு கணிப்பின்படி கம்மியான வாக்குகளை பெற்றது அருண்பிரசாத் மற்றும் ஜாக்குலின் தான். இந்த சூழ்நிலையில் தற்போது இந்த வாரம் யார் வெளியே போயிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி பெரும்பாலும் அவர்களுடைய பிரபலத்தை அவ்ளோ சீக்கிரமாக வெளியே அனுப்ப மாட்டார்கள். அதனால் தான் கடைசி ஓட்டில் இருக்கும் ஜாக்குலினை காப்பாற்ற ரவீந்தரை பலியாடாக சிக்க வைத்து விட்டார்.

இதற்கு இன்னும் ஒரு காரணம் கூட இருக்கிறது. ஏனென்றால் ரவிந்தர் என்னதான் புத்திசாலித்தனமாக விளையாடினாலும் அவருடைய உடல் உழைப்பு அங்கே சப்போர்ட் கொடுக்க முடியாததாலும் அவ்வப்போது உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு வருவதால் இந்த வாரத்தில் அவரை வெளியேற்றலாம் என்று பிக் பாஸ் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் இதில் மக்களின் ஓட்டுக்கு மரியாதை இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப விஜய் டிவி முடிவு எடுத்திருக்கிறது.

மேலும் இன்று விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் என்பதை பார்க்கவும் மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் விளையாடிய போட்டியாளர்களின் தவறுகளை எப்படி விஜய் சேதுபதி அவருடைய பாணியில் சுட்டிக் காட்ட போகிறார் என்பதை பார்க்கவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

தற்போது வரை விஜய் சேதுபதி தான் இதற்கு தகுந்த தொகுப்பாளர் என்று மக்கள் ஆதரவு கொடுத்தும் வரும் இந்த சூழ்நிலையில் இன்று அவர் தொகுத்து வழங்குவதை பொறுத்து மக்களின் மனநிலை மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News