ஆஸ்கர் விருது கெடச்சது போல் உச்சி குளிர்ந்த சூர்யா.. வாரிசு தேவ் செய்த சாதனை, வைரல் புகைப்படம்

Actor Suriya: நடிகர்களின் வாரிசு என்றாலே அவர்களும் ஹீரோ அவதாரம் தான் எடுப்பார்கள். பிரபு, கார்த்திக் வரிசையில் இப்போது சூர்யா, கார்த்தி இருவரும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

தேவ் செய்த சாதனை

dev-surya
dev-surya

ஆனால் சூர்யாவின் பிள்ளைகள் இருவரும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில் தேவ் தற்போது பெரும் சாதனை செய்து அப்பாவை பெருமைப்பட வைத்துள்ளார்.

அந்த வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது கராத்தேயில் ஆர்வத்துடன் இருக்கும் தேவ் தற்போது அதில் பிளாக் பெல்ட் வென்றுள்ளார்.

சூர்யாவை பெருமைப்படுத்திய தேவ்

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா தன் மகனின் தோளில் கை போட்டு அணைத்தபடி பெருமையுடன் நின்றார். அதேபோல் மேடையில் இருந்த அனைவரிடமும் கை கொடுத்து சிரித்த முகமாக பேசினார்.

ஒரு அப்பாவாக அவர் எந்த அளவுக்கு பெருமைப்பட்டு இருப்பார் என்பது அந்த வீடியோவை பார்த்தாலே தெரிகிறது. எத்தனை தேசிய விருது வாங்கினாலும் இந்த ஒரு விஷயத்திற்கு ஈடாகாது என்பது போல் இருந்தது.

அந்த வகையில் ஆஸ்கர் விருது கிடைத்தால் கூட சூர்யா இவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவரை தேவ் பெருமைப்படுத்தியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்