சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மொத்த பேர் கண்ணிலையும் மண்ணைத் தூவிய லோகேஷ்.. மும்பையில் இருந்து ரகசியமாய் ஊடுருவிய வில்லன்

எங்கு திரும்பினாலும் இப்பொழுது எல்லோரும் முணுமுணுக்கிறது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் தான். இவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் அத்துடன் லோகேஷ் கடைசியாக எடுத்த விக்ரம் படத்தின் தாக்கமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிக அளவில் சுண்டி இழுக்கிறது. எப்பொழுது இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று ஒவ்வொரு நாளையும் எதிர் நோக்கி கொண்டிருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு மூன்று மாதங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடைபெற்றது. அதன் விளைவாக இப்பொழுது லியோ திரைப்படம் 50% முடிவடைந்து இருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப் போவதாக தகவல் வெளிவந்தது. மேலும் அதற்கான ஏற்பாடுகளும் ஒரு பக்கம் பரபரப்பாக செய்யப்பட்டு வருகிறது.

Also read: அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரான லோகேஷ்.. அதிரடியாக கண்டிஷன் போட்ட விஜய்

அதற்காக இப்பொழுது சென்னையில் ஒரு சாக்லேட் ஃபேக்டரி செட் தேவைப்படுவதால் அதற்கான வேலைகள் எல்லாம் மும்பரமாக நடைபெற்று விட்டது. இதற்கான படப்பிடிப்பில் இங்குள்ள நட்சத்திரங்கள் அனைவரும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் மற்றும் படக்குழுவினர் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சில காட்சிகளுக்கு பிரபல வில்லன் நடிகர் சஞ்சய் தத் தேவைப்படுவதால் அவரை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என்று லோகேஷ் முயற்சியில் இறங்கியுள்ளார். ஏனென்றால் இது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும் அத்துடன் இதனால் ஒரு சீன் கூட வெளியே கசிய கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்.

Also read: விஜய்க்காக தன்னோட ஸ்டைலையே மாற்றிய லோகேஷ்.. இதுவரை செய்யாத பெரிய சம்பவமா இருக்குமோ

அதற்காகவே அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவி அந்த வில்லனை லோகேஷ் சென்னைக்கு கொண்டு வந்துவிட்டார். ஆனாலும் இது எந்த விதத்தில் சாத்தியமாகும் என்பது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அவர் கண்டிப்பாக விமானத்தின் மூலம் தான் வந்திருப்பார். அப்படி வந்திருந்தால் எப்படியாவது ஏர்போட்டில் மீடியாக்கள் கண்ணில் சிக்கியிருப்பார்.

இப்படி இருக்கையில் அவர்கள் கண்ணிலும் மண்ணை தூவி எப்படி கொண்டு வந்து சேர்த்தார் என்பது தான் லோகேஷின் சாமர்த்தியம். இப்படி ஒரு படத்துக்காக இந்த அளவுக்கு மாஸ்டர் பிளான் போட்டு படப்பிடிப்பை நடத்துவது இவராகத்தான் இருக்க முடியும். சரி எதுவாக இருந்தாலும் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்துவிட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: லியோ படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ.. ரோலக்ஸை மிஞ்சும் கேரக்டர்

- Advertisement -

Trending News