மொத்தமாய் கழுவி ஊத்தின 5 ரீமேக் படங்கள்.. ஓவர் அலப்பறையில் அடிவாங்கிய சிம்புவின் ஒஸ்தி

பிற மொழிகளில் ஹிட்டடித்த படங்களை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார்கள். ஆனால் அப்படி ரீமிக்ஸ் செய்த படங்களில் இந்த ஐந்து படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்காமல், மொத்தமாய் கழுவி ஊற்றும் படி ஆனது. அதிலும் சிம்பு ஓவர் அளப்பறை காட்டிய ஒஸ்தி படம் பயங்கர அடி வாங்கியது.

ஒஸ்தி: தரணி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் ஒஸ்தி. இதில் 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்ற நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் கதாநாயகியாக நடித்தார்.

ஒஸ்தி திரைப்படம் ஏற்கனவே ஹிந்தியில் 2010 ஆம் ஆண்டு சல்மான் கான்-சோனாக்ஷி நடிப்பில் வெளியான ‘தபாங்’ என்ற படத்தின் ரீமேக் படமாகும். இந்த படத்தில் சிம்பு ஓவர் அலப்பறை காட்டும் போலீசாக நடித்து, வசூலில் பயங்கர அடி வாங்க வைத்துவிட்டார்.

Also Read: சிம்புவின் ஒஸ்தி பட நடிகையா இது.‌? வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் கலக்கலான புகைப்படம், குவியும் லைக்ஸ்

வில்லு: 2009 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய்-நயன்தாரா ஜோடி சேர்ந்த இந்தப் படம் தளபதியின் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தை தந்த படம். வில்லு படம் வசூல் ரீதியாக படுதோல்வியை சந்தித்தது. இந்தப்படம் 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஹிட்டடித்த ‘சோல்ஜர்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

அனேகன்: 2015 ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தனுஷ், அமைரா தாஜ்தூர், கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தாலும் படத்தின் கதையில் ஏதோ சுவாரசியம் குறைந்ததால் வசூலில் அடிவாங்கிய படமாக மாறியது. இந்த படம் 2004 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘மேயின் ஹூன் நா’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக்.

Also Read: நொந்து நூடுல்ஸ் ஆன 5 வதந்திகள்.. செம போதையில் தலை கால் புரியாமல் நடந்துகொண்ட விஜய்

ஸ்டூடண்ட் நம்பர் ஒன்: 2003 ஆம் ஆண்டு சிபி ராஜ், ஷெரின் உள்ளிட்டோர் நடிப்பில் அதிரடித் திரைப்படம் வெளியான இந்தப் படத்தை செல்வா இயக்குனர். இந்த படத்தின் மூலம்தான் சிபி ராஜ் சினிமா திரைக்கு அறிமுகமானார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படம் தெலுங்கில் என்டிஆர் நடிப்பில் ஹிட் அடித்த ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரா: தெலுங்கில் என்டிஆர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட்டடித்த என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் விஜயகாந்த் நடித்த கஜேந்திரா இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதுடன் மொத்தமாய் கழுவியும் ஊற்றினர்.

Also Read: மாதவன் தவறவிட்ட விஜயகாந்த் படவாய்ப்பு.. அதகளபடுத்தி மிரட்டிய அந்த நடிகர்.

இவ்வாறு இந்த ஐந்து படங்களும் பிறமொழிகளில் ஹிட் கொடுத்தாலும், அதே படத்தை ரீமேக் செய்யும் போது தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போனதால், அவர்களுக்கு பிடிக்காமல் போன படங்களாகவே மாறினார்.