விஜய்யை திசை திருப்பி குளிர் காய நினைக்கும் பக்கவாத்தியம்.. கண் மூடித்தனமாக நம்பி காரியத்தில் இறங்கும் தளபதி

Actor Vijay: விஜய் தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணம் இவருடைய தன்னம்பிக்கையான நடிப்புதான். ஆனாலும் இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து ஏற்ற இறக்கங்களை சொல்லிக் கொடுத்து தூக்கி விட்டவர் இவருடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகர். அதே மாதிரி தற்போது அரசியலிலும் ஒரு கை பார்த்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்குகிறார்.

அந்த வகையில் இவருடன் ஒட்டிக்கொண்டு பக்கவாத்தியம் வாசிப்பது புஸ்ஸி ஆனந்த். இவர் சொல்வதைக் கேட்டு தான் தற்போது ஒவ்வொரு அடியாய் எடுத்து வைக்கிறார். ஆனால் கொஞ்சம் கூட முன்யோசனை எதுவும் இல்லாமல் அவரை அப்படியே கண்மூடித்தனமாக நம்பிக் அவர் சொல்வது அனைத்தையும் வேதவாக்காக எடுத்துக் கொண்டு வருகிறார்.

Also read: அஜித், விஜய், ரஜினியை கிழித்து தொங்கவிட்ட செந்தில்.. இந்த துணிச்சல் யாருக்குமே வரலையே!

போற போக்க பாத்தா விஜய் இருக்கும் இடம் தெரியாமலேயே காலி செய்து விடுவார் போல தெரிகிறது. அதாவது புஸ்ஸி ஆனந்த் புதுவையில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அந்த வகையில் அங்குள்ள முதலமைச்சர் ரங்கசாமிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் விஜய் அவரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதற்கு காரணம் என்னவென்றால் விஜய், தமிழ்நாட்டில் ஜெயிக்காவிட்டாலும் புதுவையில் முதலமைச்சராக ஆக்கிவிடலாம் என்ற எண்ணம் தான். அதே நேரத்தில் அங்குள்ள முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாரிசு யாரும் இல்லை, அதனால் சுலபமாக விஜய்யை அரசியல் வாரிசாக  ஆக்கிவிடலாம் என்று திட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார்.

Also read: மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் புதுவையில் முதலமைச்சருக்கு போட்டி போடும் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். அதனால் விஜய்யை முதலில் அங்கே ஜெயிக்க வைத்துவிட்டு அதன் பின் தமிழ்நாட்டில் கால் வைக்க விடலாம் என்று திட்டம் தீட்டி இருக்கிறார். அத்துடன் விஜய் ஜெயித்துவிட்டால் அதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் புதுவையில் எம்பி ஆகிவிடலாம் என்ற எண்ணத்திலும் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார்.

இப்படி விஜய்யை திசை திருப்பி அதன் மூலம் குளிர் காய்ந்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறார். இது எதுவும் தெரியாமல் விஜய் இவரை கண் மூடி தனமாக நம்பிக் கொண்டு ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வருகிறார். இவரை நம்பி விஜய் இறங்கினால் இவருடைய நிலைமை கேள்விக்குறியாக மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

Also read: அவரு தளபதின்னா நீங்க சின்ன தளபதியா.? கூட்டத்தில் வெடித்த சர்ச்சை, வலது கையை கூப்பிட்டு கடித்துக் குதறிய விஜய்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -